பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 191 உடல் தோன்றுகின்ற மாயப் பிறவியில் (ஆவித்து) ஆவிர்ப் பவித்து வெளிவந்து - பிறந்து சேர்ந்து பிணித்தலைச் செய்யும் நோயை (உடற் பிணி, மன நோய்) அடைந்து அலைச்சல் உறாமல் உரை அடியேனுக்கு உன்னைப் புகழ்ந்துரைக்கின்ற அடியவனாகிய எனக்கு ஒளி மிக்கனவும், கடப்ப மலர் சேர்ந்துள்ளனவுமான உனது இரண்டு திருவடிகளை (அல்லது ஒளி மிக்க கடப்பமலர் சேர்ந்த உனது இரண்டு தாள்களைத்) தந்தருள வேண்டும்; கடலிடையே சூரனுடைய படைகள் பொடிபட் டழியவும், (கருதலர்) பகைவர்கள்ஓட்டம் பிடிக்கவும் போர் புரிந்த வேலனே! வேலைக் கதிர்-விடு கடலினிடத்துக் கிரணங்களை வீசும் (கதிரினில்) இளஞ் சூரியனைப் போலத் திருஞான சம்பந்தராய்த் தோன்றிக் (கலை பல தேர்) பல கலை ஞானங்களையும் உணர்ந்தறிந்தவனாய் முத்தமிழ் நாட்டில் (விளங்கினவனே) (சடைப் பெருமான்) சிவனார் (நாட) விரும்ப - பரந்துள்ள (கயிலை) மலையில் ஓடி (அல்லது - சிவனார் (நாட) உன்னைத் தேட பரவி யிருந்த மலை யிடங்களில் ஒடித்) தனியாக விளையாடித் திரிந்தவனே! ஒப்பற்ற இள மான் - வள்ளியைப் (பரிவுடன்) அன்புடன் (ஆர) நன்றாக - மனங் குளிரத் - தழுவின (மகத்துவம்) விசித்திரம் (அழகு) கொண்ட பெ s (உனைதிருதாளைத் தரவேணும்) பிணக்குற்றனர். (பாடல் 184 - பக்கம் 430 கீழ்க்குறிப்பு). பிணக்குற்ற முருகன் கெளட்iனதாரியாய்க் கயிலையினின்றும் புறப்பட்டுத் தென் திசை நோக்கிச் சென்று தேவ கிரியை அடைந்து, பின்னர் திருவாவினன்குடி - சிவகிரி பழநியை அடைந்தனர்.தண்டபாணியாகத் தமது குமாரர் வெளிப் பட்டதை அறிந்து சிவபிரானும் தேவியும் அவரைத் தேடி வந்து பழநியை அடைந்து, "குழந்தாய்" - " பழம் நீ" என்று முருகனைப் புகழ்ந்து சமாதானப் படுத்தினர். சேய திரு வாவினன் குடியிற் சென்றான் குன்று தொறு நின்றான்" ... பேச அளிய மறை ஞானப் பிள்ளை பழநி எனப் புகன்றார்" . பழநிப் புராணம். திருவாவினன். சருக்கம் 48,56 இனி - தேவியுடன் முருகன் முனிந்து மலை யோடித் திரிந்த வரலாற்றையும் இது குறிக்கலாம் பாடல் 245 பக்கம் 108 கீழ்க்குறிப்பு X