பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 187 1083. குடம் என்று உவமை சொல்லும்படியான கொங்கையையும், குயிலின் மொழி என்று உவமை சொல்லும் படியான இனிய சொல்லையும் உடைய குறமகள் - வள்ளி (உன் பால்) வைத்த அன்பை நினைத்தவனே (நினைத்து உதவினவனே) வடக்கில் உள்ள மலை கைலையில் பொருந்தி வீற்றிருக்கும் மஹாதேவர் பெற்ற கந்த மூர்த்தியே மத நீர் நிறைந்த விநாயக மூர்த்தியின் தம்பியே! இட முடன் வைத்த சிந்தை - நீ இடம் பெற வைத்த என் உள்ளம் (நீ வீற்றிருக்கும் படியாக வைத்த எனது சிந்தை) உன்னை நினைக்கும் என் நெஞ்சம் - அல்லது இ(ட்)ட முடன் வைத்த சிந்தை உன்னை அன்போடு நினைக்கும் என் உள்ளம் (இணைவு அற) - இணைதல் வருந்துதல் - (அற) ஒழிய (நீ) எனக்கு முத்தி கொடுத்து, (இசை அறிவித்து) இசை ஞானத்தை அறிவித்து ஊட்டி வந்து எனை ஆணடருளுக. தட வரை - விசாலமான (வரை) சிகரங்களை உடைய (வெற்பில் நின்று) கயிலை மலையில் நின்று (தோன்றி), (அல்லது இமய மலையில் நின்று வரும்). (கங்கைச்) சரவண மடுவில் பொருந்தி எழுந்து போர்க்களத்தில் வெற்றி பெற்ற பெ s (முத்தி தந்து எனை ஆள்வாப்) 1084. மாதர்களுடைய எச்சிலை உண்டும், கையில் உள்ள மூலப் பொருள்களை (அவர்கள் பொருட்டு) (களைந்து) நீக்கி ஒழித்து, மறு பிறப்புக்கு (ஏதுவான செயல்களிற் சுழற்சி அடைந்து அலைச்சல் உற்று அழகா யிருந்த (சடம்) உடலானது (வர வர) மிகவும் உலர்ந்து போய் - காய்ந்து வாடி - மனம் நொந்து போம்படிப் புணர்ச்சிச் செயல்களைச் செய்வதற்குத் துணிந்து, அதனால் சோர்வு அடைவதற்கு முன்பாக என்னை ஆண்டருளுக; படம் கொண்ட (ஆதி சேடனாம்) பாம்பாகிய (படுக்கையை) மிகத் தக்க இடம் இது என்று கொண்டு அதில் பள்ளி கொண்ட (தூங்கின) கரிய மேகமனைய திருமாலுக்குப் பிரியமான மருமகனே! குட முனி) அகத்திய முநிவர் கற்க அன்று தமிழ் ஞானத்தை அவருடைய செவியிற் சொல்லி ஊட்டிய குமரமூர்த்தியே குறத்தி வள்ளி விரும்பும் பெருமாளே! (எனை ஆள்வாய்)