பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 9 997. வேதம்வல்ல பேரறிவாளனே! சாமியே! உன்னை வணங்கு. கின்றேன், வணங்குகின்றேன். வேலாயுதத்தைச் சிறப்புற ஏந்தும் மகள் சூரனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்! போர்க்களத்தில் (விமம்) அச்சம் தரக்கூடிய (சக்ர யூகாளா) சக்ர யூகம் - சக்கர வடிவாக அமைந்த படை வகுப்பை ண்டவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன். (விந்துநாத சிவபிரானது நவபேத மூர்த்தங்களுள் அருவத் திருமேனியாம் - நாத விந்துவாம். வீரனே! தாமரையன்ன அழகுள்ள திருவடிகளை உடைய வனே! உன்னை வணங்குகின்றேன். வணங்குகின்றேன்! நீலநிறத் துக் கூதளப்பூமாலையனே (நீலோற்பலமும், நிரம்ப கூதளமும் எனவும் பொருள் கொள்ளலாம்) உன்னை வணங்குகின்றேன், வணங்கு கின்றேன்; மேக நிறம் கொண்டுள்ள மயில் வாகன்னே உன்ன்ை வணங்குகின்றேன், வணங்குகின்றேன் - வெளியே சொல்லுதற். கில்லாத ஞான நிலையைக் கூடினவர்களின் ஞானப் பொருளே! உன்ன்ை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; (மன், நீர், தீ, வாயு, விண் எனப்படும்) பஞ்சபூதங்களாய், பிறவாய் விளங்குபவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; பூரணப் பொருளாய் எல்லாமாப் வாழ்பவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; உயர்ச்சியும் பரிசுத்தமுமுள்ள. மலைகளில் எல்லாம் வாழ்பவனே உன்னை வணங்கு. கின்றேன், வணங்குகின்றேன்; பன்னிரண்டு பெரிய தோளன்ே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; ஆபரணங்கள் அணிந்த அழகிய மார்பனே! உன்னை வணங்குகின்றேன், வணங்கு கின்றேன்; (வெள்ளைத்) தாமரையின் மேலே வீற்றிருக்கம் (நாமாதோடு) சரஸ்வதியுடனே, (சேயிதழ்) - சிவந்த இதழ்களை உடைய செந்தாமரைமீது வீற்றிருக்கும் (ஏர் ஆர்) அழகு நிறைந்த (மா) இலக்குமியும், (புலோமசை) இந்திராணியும், வீரம் மிகுந்துள்ள சப்த மாதாக்களும், அவர்களுடன் (நீடினம்) கூடிநிற்கும் எல்லாத் தெய்வ மகளிரும் எதிரே நின் று நாள் தோறும். o சத்த மாதாக்கள் அபிராமி, மகேசரி, கெளமாரி, நாராயணி வராகி, இந்திராணி, காளி (பிரமாணி, நாராயணி, மாயேசுரி, கெளமாரி, வராகி, உருத்திராணி, இந்திராணி - பிங்கலம்)