பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 147 சொல்லுதற்கு அரிய போர் வில்லை உடையவனும் (விரகுஅ விசையனால்) சாமர்த்தியம் உள்ளவனுமான - அந்த அருச்சுனனைக் கொண்டு புகழ் பெற்றிருந்த திருதராட்டிரனுடைய மக்களுடைய (துரியோதனாதியர்களுடைய) குதிரைகள், யானைகள், தேர்கள், சேனைகள் (யாவும்) இறந்து பட, (அரசை) அவர்களுடைய அரசாட்சியைத் தொலைத்து, சிறந்த இந்தப் பூமியின் (விதனம்) துக்கத்தை - வேதனையை நீக்கினவராகிய (திருமாலின்) மருகனே! நன்றாக (மலையும்) மலை ரூபத்தையும், (மாக்கடல் பெரிய கடல் உருவத்தையும் எடுத்து (எதிர்த்தோர்) யாவரும் இறந்துபட வெவ்வேறு உருவங்கள் என்னும்படியான உருவங்களை ஏற்றுப் பொருந்தி, வேற்படை ஏந்திச் சண்டை செய்த சூரனுடைய நறுமணமுள்ள பெரிய தோள்களின் பெருத்த வலிமை (உருவ) கழிந்து நீங்க வேலாயுதத்தை வெற்றிபெற வேகமாகச் செலுத்தின பெருமாளே! (கழல்கள் போற்றிட அருள் தாராய்) 1060. குடலையும், நீரையும், (கொழு) கொழுப்பையும், மலத்தையும் (ஈத்து - ஈந்து) தந்து, ஒப்பற்றனவம் குறைவுஇலாதனவுமான பல எலும்புகளாலும் பொல்லாத நோய்களுக்கு இருப்பிடம் என்னும்படி ஏற்படுத்தப்பட்ட குடிசையாகிய உடலில் ஏற்றப்பட்டதான உயிர்' என்று கூறப்படும் (வடிவம்) உருவம் இல்லாததான (புலம் அதனை) ஒரு நுண்மைப் பொருளைக் (கவரும் பொருட்டு) நாடி வருகின்ற யமதுாதர்கள் போரிடுவதற்கு வருவதன் முன்பாகவே (என்) அறிவும் முதிர்ச்சி அடைந்து, (உனது) திருவடிகளை (நான்) போற்றி செய்யக் குற்றமில்லாத உண்மைப் பொருளை (உனது திருவருள்) எனக்கு தந்து உதவி செய்யாதோ' கொடிய காட்டினிடையே வாசம் செய்கின்ற வேடர்களுக்கு (இன்ன வகையாக வந்தது இது என்று எண்ண முடியாத (கணி வேங்கையாகி) "கணி" என்று சொல்லப்படுகின்ற வேங்கை மரமாகி