பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 97 1035 (கரு) மேகம் போன்ற கூந்தலுக்கும், கூர்மை வாய்ந்த கண்களுக்கும், ஆசை விருப்பத்தை எழச் செய்யும் நெற்றிக்கும், (கதிர்) கிரண ஒளி போல ஒளி கொண்டதாய் (காவி) செந்நிறம் கொண்ட பவளத்தை ஒப்பதாய்க், கொவ்வைப் பழம் போலச் சிவந்ததான வாயிதழுக்கும், (காசு) தங்கக் காசுமாலை அணிந்துள்ள கொங்கைக்கும், (கதி சேரா) ஒரு நிலை சேராததாய் உறுதித் தன்மை இலாது ஒசிவது - ஒடிவதுபோல துடங்குகின்ற (நேரிதான) நுண்ணிதான இடைக்கும், (சீதம்) குளிர்ச்சியையும், (வாரம்) அன்பையும் காட்டுவதான நகைக்கும் - புன் சிரிப்புக்கும், தனக்கு ஒப்பே இல்லாத தொடைக்கும் - தாளக் குறிப்பைக் காட்டும் (நீதம்) தகுதியைக் கொண்டதான அடிக்கும். (நான்) மோகம் கொள்ளாதபடிக்கு உன்மேல் (நேயமோடு) அன்போடு துதிக்கும்படி (என்னைக்) கண் பார்த்து அருளுக பாரமான மேரு மலையை வளைத்த திருக் கைகளை உடையவரும், சடையிலே செம்மை வாய்ந்த பிறைச் சந்திரனையும் எருக்க மாலையையும் அணிந்துள்ளவரும் ஆன சிவபிரானது. குழந்தையே என நாள்தோறும் துதித்துப் பாடுகின்ற நாவலர்களின் (புலவர்களின்) துக்கத்தையும், பாபத்தையும், நாசம் செய்து தொலைத்து உனது இனிமை தங்கும் திருவடிகளைத் தந்தருள் பவனே! ரத்தம் கடல் போற் பெருக (போர்க்களத்திற் போய்ச்) சேர்ந்து ஓடி, நெருப்புப் போலும் கண்ணை உடைய - சூலம் ஏந்திய - காளி தேவி நடிக்கும்படி வேலாயுதத்தால். குரர்களின் சேனைகளைக் கொன்று, பேரொலி மிக்குப் பெருக மதிக்கத்தக்க மயிலாம் குதிரையைச் செலுத்தின பெருமாளே! (நேயமொடு துதிக்கும்படி பாராய்)