பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/998

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரியம்பகபுரம்) திருப்புகழ் உரை 439 திரியம்பகபுரம் 829. (உரை யொழிந்து நின்றவர்) பேசுதற்கு இயலாமல் விழித்து நிற்கின்ற இவரிடம் பொருள் (எளிது) அற்பமே எனத் தமது உணர்ச்சியினால் அறிந்து, பின்பு (திரவிய இகலருள் ஒருவர்) (திரவியம்) - பொருள், (இகலருள்) - வலிமை உடையவர்களுள் - பொருட் செல்வம் நிரம்பப் படைத்தவருள் ஒருவருடைய நட்பை அடைந்து, அவரிடத்துள்ள திரண்ட பொருளைக் கவரும் எண்ணம் கொண்டு அங்ங்னம் பொருளைத்தேடி உள்ளம் மகிழ்ந்து (உவந்து) களிப்புற்றுத் தமக்குள்ள உரிமையைக் காட்டத் தமக்கு ஞாபகமுள்ள எல்லாவித இந்திர ஜால வித்தைகளையும் காட்டவல்ல (விலைமகள்) பொதுமகளிரின் இரண்டு கொங்கைகளும் புளகம் கொள்ள நிரம்ப உறவு காட்டி (விரக அன்புடன்) காமத்தைக் காட்டும் அன்புடன் நறுமணம் மிக அந்தக் காம உள்ளத்திலேயே முழுகி, நன்றி பொருந்தினவராய், மலர்ப்படுக்கையில் பலவித லீலைகளைச் செய்து கலவிப்போர் செய்யும் சமயம் வாய்க்கும் அந்த நாளிலே. பெருகியுள்ள தனம் - (செல்வத்தை) பொருள்களை அபகரிக்கும் பலவித எண்ணங்களை உடைய வேசியர், பிறருடைய சொத்துக்களையும் தம்முடையதே என்று நினைப்பவர்கள் ஆகிய (பொதுமகளிரின்) கோப மொழிகளில் (நின்று) அகப்பட்டு நிற்கும் இழிவுள்ள என் செயல் இனி அற்றுப்போக அருள்புரிவாயாக போரையே நினைந்திருக்கும் கோபமும் வலிமையும் கொண்டுள்ள அசுரர்கள், உகாந்த காலம்போல (யுகம் முடியும் காலம்போல) (போருக்கு) எழுந்த பொழுதினிலே, உலகம் முழுமையும் பயம் நீங்க, மயில் மேலே ஏறி. திகுதி குந்திகுந் ... திமிதிமி திமியென வந்த பூதங்கள்.