பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/928

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 369 801. திரண்டு பெருகியுள்ள செல்வத்தை உடையவர்கள் தம்மாட்டு வந்தால், மிகவும் களித்துச் சிரிப்புடன் வாரும் என்று படுக்கை அருகில் வந்தவரின் விரலைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய் அவர் தொடையோடு தம் தொடை நெருங்கிப்பட உறவு மொழிகளைப் பேசி விளையாடி. பல (அன்பு மொழிகளைப்) பிதற்றி, தாம் கணக்கு வைத்திருந்த பண (முழுமையும்) தம்முடைய இடத்திலே வந்து சேரும் வரைக்கும் நல்ல இன்பகரமான வார்த்தைகளால் (பிலுக்கு) - பகட்டுப் பேச்சுக்களை (தந்திரப் பேச்சுக்களை)ப் பேசி மிக்கஇனிய வழியில் அணைவார்கள் - (பின்னும்) பெருத்த அன்பு பூண்டவர்கள் போல முருக்கம் பூப்போலும் சிவந்த வாயிதழ் அமுதுாறலை உண்ணும் என்று கூறி காமலீலைகளிற்பல விதங்கள் காட்டி மலைபோன்ற கொங்கைமீது (சாய்ந்து) துரங்கும்படி மோகம் ஊட்டுபவர்; பொருள் வற்றிப்போனால் முறுக்கும் திருப்புமாய்க் கோபக்குறி காட்டி உதையும் உதைத்துவன்சப்பேச்சும் (இகழ்ந்துபேசும் பேச்சும்) பேசுகின்ற நன்றி கெட்டவர்கள், மின்த்திலே LIIT நினைவு கொண்டவர்கள் - (ஆகிய யோ,ே செய்யம் செயல்களில் ஈடுபடும் கருத்து அற்றுப்போம்படி விரைவில் என்னைத் திருப்பி உன்னுட்ைய இரண்டு திருவடிமலர்களைத் தொழும்படியான திருவருளைத் தந்தருளுக. நெருங்கிவந்த அசுரர்களின் கூட்டம் அழிபடக் கோபித்து, மயிலின் முதுகில் வேகமாய் வந்து-இந்தப் பூமியிற் Kಘೀ))),§ அந்த அசுரர்களின் உயிரைப் பலிகொண்ட வேலனே! கைந்நகத்தால் பிரமனுடைய தலையைக் கிள்ளிப்பறித்த றைவன், திரிபுரத்தில் (தியெழ)ச் சிரித்த பரமன், அடியவர் னைப்பிலே (நின்னத்து வேன்ட) அருள்பாலிக்கும் சிவன் பெற்ற பிள்ளையே! அகந்தை கொண்ட வேடர்கள் வளர்த்த ஒப்பற்ற (சிறுமி) வள்ளியை, நறுமணம் வீசும் மலர்ப்படுக்கையின்மேல் அணைந்த திருக்கைவேலுடன் திருவுருவம் அழகுள்ள குருபரனே! முருகனே!