பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/924

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைக்கழி திருப்புகழ் உரை 365 799. (படி) பூமி, (புனல்) நீர், நெருப்பு, (அடற் பவனம்) வலிமை கொண்ட வாயு, (வெளி) காய்ம், பொய், கருவிற் பிறப்பு கூடும் அவஸ்தை (சாத்துவிகம், ராஜசம், தாமதம் என்னும்) முக்குனங்கள் நெடிதாய்க். கூடிவரும் நோய்கள், (மச்சை) மூளை, அல்லது எலும்பின் சத்து, சுக்கிலம் (உதிரம்), ரத்தம் (அத்தி) எலும்பு, (மெய்ப்பசி) உடலில் உண்டாகும் பசி, உள்ள (நிணம்) மாமிசம், இவை கூடிய சடக் குடில்- அறிவிலாத பொருளாகிய சிற்றிலாகப் போற்றப்படும். (இந்த) தேகத்தைத் தாங்கி மிகவும் கிழானதாய்ப் பெறப்பட்ட இப்பிறப்பிலே ானத்தோடு கூடிய உள்ளம் இல்லாதுபோய் அடி நாயேனாகிய நான் திரிகின்ற இது. (கற்பு அல) நீதியன்று ஆதலால் (நி) உனது திருவடியின்னயை எனக்குத் தந்து, உனது (தமர்) உன்னை அண்டியுள்ள பழைய டியார் கூட்டத்துடன் என்னையும் ஒருசேர் வைத்து அருள்புரிய வேண்டுகின்றேன். கொடுமை வாய்ந்ததும் ஒப்பற்றதுமான கோழியைக் கொடியாக உடையவ்ன்ே அழகுள்ள் திணைப்புனத்து (வள்ளிக்) கொடிபடரும் புயமல்ைக்ள்ை உடைய் ஒளிவேலனே! (குமர) இளியோய்! (சமர சினக்கும் அரவு) போரில் மிகக் கோபிக்கும் பாம்பை அணியும் (அத்தன்) ஐயன் சிவபிரானது மெய்ப் புதல்வனே! (யாவரும்) மகிழும், முத்தமிழிலும் வல்ல புலவனே! விசேடமான அழகிய மத்தகத்தோடு கூடிய பெரிய மலையை ஒத்தவரான கணபதியின் (அத்தர்) தந்தையின் (அத்த) குருவே! (அந்தத் கணபதியின்) - அடல் அனுச - பராக்ரமம் விர்ப்ந்த தம்பியே! அல்லது தடவ்ரையர் கணபதியின் அத்துர்த்து அடல் அனுச இந்த் மேன்மையும் வீரமும் வாய்ந்த தம்பியே! ானங்லையில் உறைபவனே அல்லது ஞானத்துறையில் விளங்குபவனே! (திரு விருகூடிங்கள் (மருவும்) பொருந்தி விளங்கும் திருவிட்ைக்கழிப் பெருமாளே! (எத்தலத்தரும்) எந்தப் பூமியில் உள்ளவரும் தன்னிட்ம் அடைந்தால், அவர்க்கு முத்தி. நிலைய்ைத் தரும் திருவிடைக்கழிப் பெருமாளே! (உனது தமர் ஒக்கவைத்து அருள்வாயே)