பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/914

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகை) திருப்புகழ் உரை 355 794. (ஈளை) கோழை, சுரம், குளிர், (வாதம்) வாயு மிகுதலாகிய பிணிக்கூறு, என்னும்பல நோய்கள் சூழ்ந்து மிக்க இளைப்பு அடையாமல் (ஈடுபடும்) வலிமையை யிழந்து துன்புறம் சிறிய கூடாகிய இந்த உடலிற் புகுந்து, (ஈற்றில்) இடுகாடு சுடுகாட்டிற் சேரும்படி உயிரை இழக்காமல். மூளை, எலும்புகள், நாடிகள், நரம்புகள், இவையெலாம் வேறுபட்டொழியத் தியில் முழுகி வேகாமல். மூலப்பொருளான சிவயோகபதவியில் (நான்) வாழ்வு பெறும்படி உபதேசித்தருளுக. வாளை மீனானது தனக்குச் சமீபத்தில் உள்ள குளத்தில் இருக்கின்ற கயல்மீன், சேல்மீன் இவைகள் முதுகிட்டு ஒட வலைகளைக் கிழித்துத் தாவி. வெற்றியே மிகுந்து, வரிசையாயிருந்த தாழைகள் உருக்குலைய அவைகளின் மேல் மோதிக் கோபித்து, பிறைச்சந்திரன் படியும் பாளைகளைக்கொண்ட நறுமணம் வீசும் கமுகமரக்காட்டில் அம்மரங்களின் உச்சியிற் பாய்ந்து ஒடித்து, பெரிய கடலின் கழியிற் பாய்கின்ற பாகை என்னும் செழும் பதியில் மேவி வளப்பம் நிறைந்த மயிலை (அல்லது வள்ளியம்மையை) விரும்பிய பெருமாளே! (வாழ்வு பெறும்படி மொ ழிவாயே) 795. குவளை மலருக்கு ஒப்பென்று போர்செய்வதாகி, இரண்டு குழைகளையும் வெருட்டுவதான அழகிய வேல்போன்ற கண்களை உடைய பெண்களின் பொல்லாதனவும், கஸ்துாரி யணிந்தனவும், புளகம் கொண்டனவுமான கொங்கை மலைகளைக்கூடி நாள்தோறும் மோகம் கொண்டவனாய் துவட்சியுற உருகின லீலை விதங்களில் தளர்ச்சியுற அக் காமக் கடல்களின் அலைகளுக்குள்ளே.