பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/911

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை LJITGENo. (இது மாயூரத்துக்குச் சமீபத்தி லுள்ள "பாகசாலை" என்னும் சுப்பிரமணிய ஸ்தலமா யிருக்கலாம். கடல் கழி பாயும் பாகை என 794ஆம் பாடலிற் கூறப்பட்டுளதால் கடற்கரைத் தலம் இது. மணவூர் ரெயில் ஸ்டேஷனுக்குத் தெற்கு சுமார்2 மைலிலும் பாகை'என்றொரு தலம் உண்டு. 793. திருவடி உற தான தானன தானம், தான தானன தானம் தான தானன தானம் தனதான ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந் தாகம் வேர்வுற மால்கொணன் டயராதே. ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென் றாயு வேதனை யேயென் றுலையாதே; சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந் த்யாக மீபவர் யாரென் றலையாதே. தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந் தேவ நாயக நாணின் றடைவேனோ, பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும் பாவை பாகனு நாளுந் தவறாதே. பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென் பாகை மாநக ராளுங் குமரேசா,

  • கூட லான்முது கூணன் றோட வாtதுயர் வேதங்

கூறு நாவல மேவுந் தமிழ்வீரா. கோடி தானவர் தோளுந் தாளும் வீழ வுலாவுங் கோல மாமயி லேறும் பெருமாளே.(1)

  • பாண்டியன் கூனை நீக்கியது - பாடல் 181-பக்கம் 122 கீழ்க்குறிப்பு.

1. உயர் வேதம் கூறும் நாவலம் மேவும் தமிழ் வீரா. உயர்ந்த தமிழ் வேதமாகிய தேவாரப் பாக்களை - திருப்பாசுரம் முதலிய பாக்களைக் - கூறின நா வன்மை கொண்ட தமிழ் வீரனே!