பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/908

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயூரம்) திருப்புகழ் உரை 349 செருக்கு உள்ள குரங்குப்படைப் பலத்தினால் பெரிய மலைகளை எடுத்துப்போட்டு அணைகட்டிக் கடலைக் குறுக்கே அடைத்து, (அதில்) அந்த அணைவழியாகச் சென்று அங்கிருந்த அரக்கர்கள் பொடியாகப் போர். மிக்கெழ வீரம் உள்ள அம்பைச் செலுத்திப் படவைத்து வெற்றிகொண்ட மேலான அழகிய மாமன் (திருமாலும்) அழகிய அப்பா (சிவனும்) மெச்சுகின்ற ஒப்பற்றவனே! முத்தமிழ்ப் பெருமாளே! ஃபேடிே என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (உனைத் திருப்புகழ்ப் பகர்வேனோ) மாயூரம் 792. fதேவாமிர்தத்தை நிரம்ப ஊற்றி, மாமரத்தின் இனிப்பான பழத்தை அதனுடன் பிழிந்து (அவையுட்ன்) பாலும், தேனும் (கூட்டி) (அவையுட்ன்) தித்திக்கின்ற +கற்கண்டையும் கலந்த அத்தனைச் சுவையுள்ள் வாயிதழ் (ஊறலை) உடையவர்களாய் (348 ஆம் பக்கத் தொடர்ச்சி) "செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக்கருள்கை மறவேனே" (விநா - துதி.3) 'திருப்புகழ் நித்தம் பாடும் என்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே" (திருப்புகழ் 105) என வருவனவற்றால் நன்கு தெரிகின்றது (அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 35-36-பார்க்கவும்)

  • திருத்தணிப்பதிப் பெருமாளே." - என்றும் பாடம்

1 அமுதை நிரம்பச் சொரிதலும், அதனொடு இனிய மாம்பழச்சாறு, பால், தேன். கற்கண்டு இவைகளைச் சேர்ப்பதும், செய்து கிடைக்கும் ருசியது வாயிதழ் ஊறல் என வரும் அருணகிரியாரின் இத் திருவாக்கினின்றே. அவர் பாடிய திருப்புகழ்தான் அத்தகைய கூட்டுச் சுவையது எனக் கான்கின்றார் திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் பாடிய கவிராஜ பண்டாரத்தையா "உதிருங் கனியை நறும்பாகில் உடைத்துக் கலந்து தேனைவடித், ஆாற்றி யமுதின் உடன்கூட்டி ஒக்க குழைத்த ருசி பிறந்து மதுரங் கனிந்த திருப்புகழ்ப் பாமாலை" - என்றார்

  1. கண்டு - கற்கண்டு.