பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/896

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்தீசுரண் கோயில்) திருப்புகழ் உரை 337 பரிசுத்த தேவதை பிரமா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மூவரையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் பதவியில் தாபித்த எம்பெருமான், புள்ளிருக்கு வேளுரில் வாழ்கின்ற வினைதீர்த்த சங்கரர் வைத்திய நாதர்ாய் - ப்லவினை தீர்க்கும் சங்கரர் சிவபிரான், சாரூபம் தோய்ந்தவர் - உருவத் திருமேனி கொண்டவர் ஆகிய பெருமானொடு ஏற்று . பொருந்தி இருப்பவளாம் பார்வதி அருளிய குழந்தையே! வேலனே! 6TCԼք காடலையும் வாட்டி, வஞ்சக மூடர் களாகிய சூரர்களையும் வாட்டி, யமபுரிக்கு அவர்களை அனுப்பின கோபத்தைக் கொண்ட மயில்வாகனனே! (அல்ல ஆ, ') மயிலைக்கொண்ட செல்வனே) பிரமனுடைய நான்கு தலைகளும் சி (சீழ்) கொள்ளும்படி (குட்டி) ஆடம்பரம் செய்த மந்திர வேலனே திருமாலின் மகள். வள்ளிமீது கருணை காட்டிய பெருமாளே! (என்றனை உடனாள்வாய்) 886. மேகம்போலக் கறுத்து நீண்ட கூந்தலானது |கொங்கைப் பாரங்களின் மேலே முத்துமாலை ஆட காதில், குழைகள் ஆட, கண்கள் ஆட, தேமல் அல்லது பொலிவு பரந்துள்ள உடல் நறுமணங்களை வீச, அல்குலின் மேற்பட்டு நல்ல மணம் அதிகரிக்க மீனுல் - மின் நூல் - ஒளிவீசும் நூலாடையானது இடையில் ஆட, மயில்போல நடை நடக்க, பாதமணி நூபுரம் ஒலம் ம் என ஒலம் ஒலம் என்று முறையிடும் ஒலியுடன் `ಫಿ அணிந்துள்ள சிலம்பு சப்திக்க் (அல்லது பாதத்தில் ரத்னச் சிலம்பு சப்திக்க) மேல்ே வில் - ஒளியை, வீசபனி - பணிவீச - ஆபரணங்கள் வீச, கீரம் பால் போலவும் குயில் போலவும் உள்ள குரலுடன் முழவோசை - முரசொலிபோல் "மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன் அலம்புவார் கோதை அடியிணையில் வீழ்ந்து - புலம்புமா நூபுரங்கள் பூண்டு" எனவரும் - நளவெண்பாவிற் காண்க (சுயம்வர 33) * கிரம்....பால்