பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை "புயலத்தைக் குயிர்தத்தைக் கிளைபுக்குத் தொளைபச்சைப் புனமுத்தைப் புணர்சித்ரப் புயவிரா. t புரவிக்கொட் பிரதற்றத் திருள்திக்கிப் படிமட்கப் புகல்பொற்குக் குடவெற்றிக் கொடியோனே,

  1. கயிலச்சுத் தரதத்துச் சயிலத்xதுத் தரநிற்கக்

0கரணிச்சித் தருள்கச்சிப் பதியோனே. "புயல் அத்தை அத்தை தலைவி (பிங்கலம்) - புயலை வாகனமாகக் கொண்ட தலைவி மேகம் இந்திரனுக்கு வாகனமாதலால் தேவசேனைக்கும் வாகனமாம். தெய்வ மின் ஊர் செல் (தெய்வயானை ஏறி வருகின்ற மேகவாகனம்" கந்தரந்தாதி உரை - 100. t புறத்திருளை அகற்றுதற்குப் புணரியெழுஞ் சூரியனைப் புலளிக் காலைச் சிறக்குமிரு சிறகடித்துத் தினத்தினமும் அழைத்துலவுஞ் சேவலே " சேவல்பத்து

  1. கயில் விமானத்தின் கொடுங்கை மேற்பாகம் 'கயில் பூண்கடைப் புணர்வு மாட்டும் கொக்கி அச்சு - அச்சாணி, ஆதாரம் தரம் வலிமை தத்து - ஆபத்து. தகுதி X உத்தரம் நிற்க அகத்தியர் உதவிய வரலாறு:

பார்வதி திருமணத்தின்போது இமயமலையிற் கூடிய தேவர் முநிவர் ஆகியோரின் பெருங்கூட்டத்தால் பூமியின் வடதிசை (இமயம்) தாழ்ந்தது. தென்திசை உயர்ந்தது அங்குக் குழுமி இருந்தோர் அஞ்சினர். சிவபிரான் அகத்தியரை நோக்கி நீ உடனே தென் திசைக்கு ஏகுக நீ தென்திசையிற் பொதியமலையைச் சேரின் நிலைகுலைந்து நிற்கும் இப் பூமி சமன்நிலை பெறும் எனக்கூற அங்கணமே அகத்தியர் தென்திசை நோக்கிச் சென்று பொதிய மலையை அடைய வடதிசைக்கு உற்ற ஆபத்து நீங்கி வடதிசையும் தென் திசையும் சமமான நிலைகளை அடைந்தன. 'தென்னாடு நண்ணி. பொதியமலை மேவுதி வையமெல்லாம் மேனா ளெனவே நிகராகி விளங்கும் என்றான்" "பொதியம தென்னும் வெற்பிற் புனிதமா முநிவன் வைகத் துதியுறு வடபால் தென்பால் புவனியோர் துலைபோல் ஒப்ப" -கந்த புராணம் 1-10-53-64. 0 கரணி - சிற்ப சேலை செய்யும் தபதி. கரணி - தொழில் செய்பவர். கரணம் - தொழில் - சித்திரக் கரணம் " சிலப் 3.54 சித்தர் - உள் . கச்சி - அகத்தியர் எனும் பெரியார் (உள்) தியானித்து வணங்கின - காஞ்சி.