பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/864

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 305 சங்கு நன்கு வெளிக் கக்குகின்ற முத்தும், அழகுள்ள பரிசுத்தமான ஒள்ளிய நாகரத்னங்களும் ஒளிவீசம் சண்பை என்னும் நகரில் (சீகாழியில்) வீற்றிருக்கும் பெருமாளே! தேவர்கள் பெருமாளே! (மிடிமை...அகல நின் அருள் கூர்வாய்) 775. மதப் போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், மருட்சி அடைந்தும் (விளக்கமின்றி மயங்கியும்), (இடையிடையே) கோபித்தும் வருவதான சமயங்களும், சமயம் என்பதே (அல்லது தெய்வம் என்பதே) ஒன்று இல்லை என்பவரும், பறிதலையராம் சமண மதத்தினரும் - இங்ங்னம் யாவரும் நின்று கலங்கும்படியாக, யாவரும் விரும்பத்தக்க தமிழ்ப்பாடல்களைச் சொல்லும். செல்வாக்கையும், உபகார குணத்தையும், வெற்றியையும், மங்களகரமான (பல) பெருமைகளையும், சீர்மையையும், நற்குணத்தையும் நீ குழவியாய்ப் பயின்ற சரவண தீர்த்தத்தையும் (மடுவையும்) உனது பொறுமையையும், புகழையும், விளங்கும் ஒப்பற்ற வேலாயுதத்தையும், வெற்றிச் சின்னங்கள் விளங்க மயில்மீது தேவர்களும் மனம் உருகி வணங்கும்படியாக வருகின்ற திருவடியையும், உனது பலவிதமான (விதரணமும்) கொடைப் பெருமைகளையும், உனது சாமர்த்தியத்தையும், (தரமும்) தகுதியையும் (மேன்மையையும்), தினைப்புனத்து மான் - வள்ளியின் கஸ்தூரி, குங்குமம் (செஞ்சாந்து) அணிந்துள்ள கொங்கையில் மயங்கி நொந்து, அவளது திருவடியை வருடி (கால்பிடித்து), மணஞ்செய்து, அவளைப் புணர்ந்து அணைந்து நின்றதையும், பின்னும் உனது பல (விஜயமும்) வெற்றிச் செயல்களையும் அன்புடனே (மொழிந்து மொழிந்து) பலமுறை எடுத்துப் போற்றித் துதித்து - உனது பெருமையை (என்றும்) மறவேன், மறக்கமாட்டேன்.