பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/854

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி) திருப்புகழ் உரை 295 771. அலங்கார ஒழுங்கு அமைந்த சிலை யுருவம் என்று சொல்லும்படி நறுமணம் உடலில் நிரம்ப, அணி ஆபரண மாலைகளைச் சுமந்து, நல்ல ஆடையை அணிந் து, மாமத இதமாகி - (அல்லது விதமாகி) மிக்க காம இன்பததராகி, அல்லது.காமவகையிற் பட்டவராய்த். தமக்கு ஒப்பாகமாட்டார் (இப் படியோர்) இந்தப் மியில் உள்ளோர் என்று சொல்லும்படி, இரண்டு கைகள் றையக் (கணைமோதிரம்) முத்திரை மோதிரம் பல அணிந்துள்ளவர்களாய் சொல்லப்புகின் (ஏம்) கலக்கம் உறும் (அந்த) நாள்களிலும் உடலை விரும்பிப் பாதுகாத்து. இப்படியே பல வாணிபம் செய்வார் இவ்வாறே பல வியாபாரங்கள், செய்வார்கள் கொடாதவர்கள்போல பணம் ஒரு காசு அளவுகட வெளிவிடார்கள் (கொடார்கள்), (சற்பனைகாரர்) வஞ்சகப் பேர்வழிகள், பிசாசு போன்றவர்கள் - உன் திருவடியைப் போற்றாது (தமது தொழிலைச்) செய்பவர் கூட்டத்திற் பட்டவனாகிய நான் ஒரு பாவி, உண்மையாக எப்படி ஒரு கரை நான் சேர்வதும் செந்நிறச் சேயே! அற்புதம் ஆகும் வண்ணம் அந்த ஒப்பற்ற பொருளை எனக்கு உபதேசித் தருளுக. இருள் நிறைந்த அந்த கிரவுஞ்சகிரி பொடியாகிப் போகவும், பொய் நிறைந்த சூரனுடைய ஊர் பாழாகவும் (அல்லது சூரனம் தலைவன் அழியவும்) தேவர்கள் - எங்களை நல்ல நிலையில் வைத்தருள்வாய்போதுகாத்தருள்வாய் அழகிய திருவடிகளை உடையவனே! என்று தொழ வேலைச் செலுத்தினவனே! (வையாளிப்பரி வாகனமா கொளும் மயில் வாழ்வே!) சவாரிக்கு உதவும் குதிரை வாகனமாகக் கொண்டுள்ள மயில் வாழ்வே! (துவிவு ஆழி) (அகத்தியரால் உண்ணப்பட்ட) |- ஏழு மலைகள் இவைகள் கலக்கமுறவும், துள்ளாகவும், சிய்த மயில் வாழ்வே (மைபோலக்கதிர்) பசுழை நிறம்கொண்ட (அல்லது கருமேத நிறம்கொண்ட) பொருந்திய நிறத்தை உடைய மயில் வாழ்வே' (மயில்மேல் வரும் செல்வமே!)