பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/852

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 293 770. அழிந்து போகும் தன்மையதான மாமிசம், தோல்கள், இவைகளைச் சுமக்கும் உடற்சுமை, மாயம் மிக்கதும், பதன் அழியும் தன்மையொடு கூடியதும், ஈற்றில் சுடப்படுவதும், நாறுவதுமான கூடு (அல்லது சிறுகுடில்), வேதம் நான்காலும் ஒதப்படுகின்ற நான்குமுகன் (பிரமனால்) ஏற்படுத்தப்பட்டு அழகுடன் உருப்பெற்று எழுந்து ஒடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்வடைந்து உடல் கூனி, தடியுடனே நடந்து இழிவைத்தரும் கோழை மிக்க (கூளச்சடம்) குப்பையான உடலான இதை மகிழ்ந்து பூமியில். கூசும்படியாக (நாணம் உறும்படியாக), விதிப்பிரகாரம் செல்வதான (இந்த) உலக மாயத்தில் உண்டாகும் கொடிய நோய்கள் நீங்கி, உனது அழகிய திருவடியையே பெறுமாறு இன்று அருள் புரிவாயாக. = சேனன்' என்னும் (பட்டப்பெயர் வைத்திருந்த சமண குருமார்கள் இருந்த (கூடலில்) மதுரையில் (அல்லது குரு கூடல் - பெருமை வாய்ந்த மதுரையில்) அன்று ஞானத்தமிழ் நூல்களாகிய தேவாரப் பாக்களைப் பாடிக் கூட்டமான சமணர்களைக் கழுவின்மேல் ஏறும்படி. திடத்துடன் திருநீற்றைத் தந்து பரப்பி மீன்கொடி ஏந்தும் பாண்டியனுடைய உடலில் சேர்ந்த கொடிய (சுர) நோய் திர அருட்சுரந்த குருநாதனே! (வள்ளிமலைக்) காட்டில் இருந்த சிறுமானாகிய வள்ளியை நினைந்து தினைப்புனத்தின் மீது நடந்து சென்று ஆசைக்கிளியாம் அவளுடன் பேசியும், வில் ஏந்திய வேடர்கள் காணும்படியாகக் (கணி) வேங்கை மரமாய் வளர்ந்து நின்றும், அந்த ஞானமானை, குறமானைத் திருமணஞ்செய் ஆl சீகாழிப் பதியில் அமர்ந்து மகிழும் பெருமாளே! (கோலக் கழலே பெற இன்று அருள்வாயே)