பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/846

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீகாழி திருப்புகழ் உரை 287 பூச்செண்டை அணிந்துள்ள சடையில் (பாந்தள்) பாம்பு, கங்கைநீர், சந்திரன், எலும்பு இவைகளை அணிந்தவன், பெருமை பொருந்திய திருநீற்றைப் பூசியுள்ள சிவந்த தேகத்தினன் - ஆகிய சிவனது குமாரனே! சேந்தனே (சிவப்பு நிறமுடையவனே! வேலனே! முருகோனே! சந்திரன் போன்ற திருமுகத்தையும், கொங்கையிற் சந்தனம் கொண்ட மார்பையும் உடையவள், என்னுடைய உள்ளத்திற் புகுந்துள்ள "பாங்கி மானொடு" - தோழி வள்ளியுடன் உள்ளம் மகிழ்ந்து மயேந்திரம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (நாயனும் உழல்வேனோ) 768. அலைவீசும் கடல், வில்லேந்திய மன்மதன், மாலைக்காலத்துக் காற்று, மாதர்களின் வசைப்பேச்சு இவையெலாம் நெருப்புப்போல (என்னிடம்)வர, அசைந்து வருவனவாம் விடைகளின் (மாடுகளின்) மணி, அன்றில் பறவை, குயில் இவைகளின் ஒசைக்குப் பயந்து நானும். நெருப்பிலிட்ட Gal போல வாடி, வியர்வை உண்டாக, அகிலும் ...ក្លៀ விஷம்போலப் பொருந்த, அணிந்துள்ள ஆபரணங்கள், ரத்னமாலைகள் பலவும் வெந்து சாம்பல்ாக, உடலின் நிலை வேறுபட்டு, கொங்கை நெருப்பைச் சொரிய, முன்புபோல. முன்பிருந்த நினைவானது அழிந்து தன்வசம் (அற அற) மிகக்கெட நின்று தளர்ச்சியுண்டாக, முழு நிலையில் வந்துள்ள காம உணர்ச்சி நெருப்பை மொண்டுவீச - அதனால் நான் வாட்டமுற்றுச் சோர்வு அடையாமல் வாசனை வீசுகின்ற திரண்ட புயங்கள், (உந்து வேல்) செலுத்தப்படும் வேலாயுதம் (அல்லது முந்துவேல் - 蠶 விளங்கும் வேல்), ஆழகிய (முளரி) (பாத) தாமரை. (அல்லது வேல் அண்ந்துள்ள திருக்கரத் தாமரை) இவையுடன் அழகிய தொங்கும் மாலையை (அல்லது தொங்கல் தார் . ம்ாலைகளை (என்மீது) முனிவு அற் - வெறுப்பு காபமில்லாமல் உன் னுடைய திருவருள்ான எனக்குத் தந்து எனக்குள்ள மாலை - காம மயக்கத்தைக் கோபித்து நீக்காதோ!