பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/838

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுட்டம்) திருப்புகழ் உரை 279 (உடல்) மெலிவடைந்து, குறி துர்நாற்றமுள்ளவர்கள், (பிறிகள்) கிழிவுண்டவர்கள், கலகமே செய்யும் மூதேவிகள், (பீடிகள்) பீடித்துத் துன்புறுத்துபவர்கள், விருதுபேசி பெருமைப் பேச்சுக்களைப் பேசிக் குடியைக் கெடுப்பவர்கள், (சேடிகள்) இளமை உடையோர் இத்தகையோரது உறவு ஆமோ! (உறவு ஆகாது என்றபடி) போரில் வெற்றியையே தரும் கரும்பாகிய நீண்ட வில்லை உடைய மன்மதனது உடல் எரிபட்டு உலர்ந்த சருகுபோல் விழும்படி (திச்) சிரிப்பைச் செலுத்திய பிறை நிலா வாழ்கின்ற சடையரின் இடது பாகத்தில் உள்ள ஒப்பற்ற மாது, எல்லாராலும் புகழப் படுகின்ற (பரா) சக்தி, நிலைகுலையாத மனப்பான்மையை மேற்கொண்டுள்ள சிவபக்தி நிறைந்த பரமேஸ்வரியாள், மூவுலகையும் அருளுடனே முன்பு (ஈன்றவள்) படைத்தவளான உமாதேவி அருளிய குழந்தையே! கடலில் பொன்மலையாகிய மேரு (மத்தாக)ச் சுழன்று ஆடும்படி வாசுகி என்கின்ற பாம்பைக் கயிறாகக் கட்டி முன்பொரு காலத்தில் (அமுதார்சுவை) சுவையாரமுது சுவை நிறைந்த அமுதத்தை சிவபக்தர்களுக்கே (இது ஆம் என்று) இது உரியதாம் என்று பங்கிட்டுக் கொடுத்த திருமாலாம் இராமர், லக்ஷ சமிதேவி சென்று பணிந்து பூசித்த பூரீ ஆதிவராகப் பெருமாள் - அவரது மகளாகிய வள்ளியுடைய அழகிய கொங்கை மீது ஆசை கொண்டு அவருடன் விளையாடின (முருகா): திரு முட்டப்பதி எனுந்தலத்தில் வாழ்கின்ற முருகா! தேவர்கள் பெருமாளே! (குடிகேடிகள் சேடிகள் உறவாமோ) x பூ முஷ்ணம் திருமாலின் திருநாமம் ஆதிவராகப் பெருமாள்" என்பது. லக்ஷ்மி பூசித்ததலம் ஆiமுஷ்ணம் எட்டு ஸ்வயம் வ்யக்த ஸ்தலங்களில் ஒன்று மற்றவை ஆரீரங்கம், திருவேங்கடம், வானமாமலை, புஷ்கரம், நைமிசாரணியம், பத்ரிகாசிரமம், சாளக்கிராமம் என்பன. ي