பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/834

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுட்டம்) திருப்புகழ் உரை 275 (கடி) சிறப்பு வாய்ந்த முத்தாலாய மாலை, (வளை) சங்கிற் கிடைக்கும் முத்தாலயமாலை, கடலிற் கிடைக்கும் முத்தாலாய மாலை, பாம்பு தரும் சூடுள்ள முத்தாலாயமாலை இப்படிப்பட்ட எல்லா மாலைகளும் மார்பிலே (அடைவு ஒத்து) தகுதி பெறவே புரண்டசைய அடியேன் எதிரே அடர்ந்த நெருங்கிய பச்சைநிறக் குதிரை - மயில்மீதே திருவருள் சுரந்து - பெண்ணோடு (உனது பத்தினிகள்) தேவசேனை - வள்ளியுடனும் (அல்லது - அருளிற்பெண்"இச்சா சத்தியாம் வள்ளியுடனும்) அடியார் கூட்டத்தோடும் வந்து அருள்புரிவாயாக (மழை யொத்த சோதி) மேகம்போலு நிறத்தை உடைய சோதியுமை, குயிலும் கிளியும் போன்றவள், மழலைமொழி பேசும் தாய், எம்மைப் பெற்ற

  • 'இச்சா சக்தி தெய்வ வள்ளிக்கு ஹர ஹரோ ஹரா'திருமுருகன் ஹர ஹரோ ஹரா கும்மி.

பக்கம் 274 தொடர்ச்சி (3) அரவினும் அழல் முத்து என்பர். பாம்பு உமிழும் முத்துமணி ரத்னம் சுடும் என்பது. " சுடுமணி உமிழ் நாகம்" - சம்பந்தர் 1-118-1. (4) கடல் முத்து (எங்ங்ணம் பெறப்படும் என்பது) "கடல்வாழ் பரதர் மனைக்கே துனை மூக்கின் சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை" - சம்பந்தர் 1-66-1. "சங்கு கடல் திரையால் உதையுண்டு சரிந்து இரிந்து, ஒசிந்து, அசைந்து, இசைந்து சேரும் வெண்மணற் குவைமேல் தங்கு கதிர்மணி நித்திலம்" சம்பந்தர் 1-136-2

  • அடிமைக் குழாம் உடன் வரவேண்டும் என்பது அருணகிரியார் வேண்டுகோள் "பழைய அடியவருடன்....ஒரு விசை வரவேணும்" திருப்புகழ் 387.

f மழை நீருண்டமேகம் - தேவியை "மைம் மலர் நீலநிறங் கருங்கண்ணி" என்பர் அப்பரும் -V1-89-5. # தேவி - மழலைச் சொல் ஆயி என்பர் கிளி மழலைக் கேடில் மங்கையோர் கூறுடையான்' - சம்பந்தர் -1-105-6.