பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/832

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுட்டம் திருப்புகழ் உரை 273 ஆக்கா யாவும் பற்றியே (யாவும் ஆக்கா பற்றியே) எல்லாவற்றையும் ஆக்கியும், (பற்றியும்) கொண்டு காத்தும் திரிபு உற நோக்கா - வேறுபாடு பொருந்தப் பார்த்தும் எதையும் (செற்றவள்) அழித்தவள் (படைத்தல், காத்தல், அழித்தல் - முத்தொழிலையும் செய்பவள் - திருவிளையாடலாக ஈசனுடைய (இடது) பக்கத்தில் வீற்றிருப்பவள் - ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே! (எத்தா நாளும்) நாளும் ஏத்தா - தினந்தோறும் போற்றிசெய்து, (தர்ப்பணம்) நீர்க்கடன், ஜெபம் இவை செய்து, (அல்லது இவை தமைத்) துறந்தோரா §); தமது ஞான நிலையிற் பற்றிய குருபர மூர்த்தியே, யாப்பிலக்கணத்தை ஆய்ந்தெடுத்த (யாப்பிலக்கணம் ஆய்ந்தமைந்த) சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாடல்களை அருளிய முருகனே! ஏற்பவர்கள் தாம் வர (அவர்களுக்கு) இஷடத்துடனும் மகிழ்ச்சியுடனும் (பொருளை) வாய்க்கும்படி - சேரும்படி வீசுகின்ற (கொடையாளிகள் உள்ள) யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே! (பொற்பிரபை நெடுமதிள்) பொன்னொளி வீசும் நீண்ட மதில் சூழ்ந்துள்ள யாழ்ப்பாணாயன் பட்டினத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (ஞானம் பெற்றினி வழிபட அருளாயோ) பூரீ முஷ்டம் 764. (கழை) மூங்கில் அல்லது கரும்பு தரும் முத்தாலாய மாலை, (புயல்) மேகம் தருகின்ற முத்தாலாயமாலை (கரி) யானை தரும் முத்தாலாய மாலை, மலையிற் கிடக்கும் (272-ஆம் பக்கம் - தொடர்ச்சி.) 11 முத்து பிறக்கின்ற இடங்கள் - பாடல் 306-பக்கம் 260 கீழ்க்குறிப்பு: பாடல் 278-பக்கம் 192 கீழ்க்குறிப்பு. பலவித முத்துமாலைகளையும் மார்பில் அணிந்துவர வேண்டும் என்கின்றார் . இக் கருத்து. கரியினிள் - வளர் மருப்பின்கண் ஒளிகிளரு முத்துங் (தொடர்ச்சி 274 ஆம் பக்கம் பார்க்க)