பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கூடலையற்றுர்) திருப்புகழ் உரை 263 கிடைத்துள்ள மலர், சாந்து, புனுகுசட்டம், பன்னிர் இவைகளுடனே நல்ல காற்றுவர அனுபவித்து, தாங்குவனவாய் மார்பில் ஆபரணங்கள், முத்துமாலைகள் நன்கு கிடைத்ததென அணிந்து அழகுபெற (பவிசோடு). சோபையுடனே - விளக்கத்துடன்ே - (மகிழவு) மகிழ்ச்சியும் அன்பும் மிக்குப் பெருக - (மை) திட்டின (அல்லது கூரிய) கண்களை உடைய ஒளி பொருந்திய மாதர்களுடனே விளையாடி, அந்த (காம) வலையிலே மனம் பூட்டப்பட்டு, போய், நோய்களுடன் வலிகளும், வாதநோயும் என(ப்பல நோய்கள்) ஒன்று சேர்ந்துவிட, (பேர்ந்து) - நிலைமாறி, வினைகள் ՇւՔւգ-, அடியேனும் உன்மீது அன்பு இல்லாமல் (தேட்டம் உற) சேகரித்த பொருள் (நிரம்ப) இருப்பதால் மனம் ஒருவாறு தெளிவு பெற்று சாவு என்பதே இல்லை என்னும் எண்ணத்துடனே வாழ்நாளைச் செலுத்த நமனார் (தமது தூதர்களை) ஒட்டி அனுப்ப, (காய்ந்து) மெலிந்து (வரி) எழுத்துள்ளதும், பிரமன் து அடையாளம் கொண்டதுமான (சீட்டு) ஒலைச்சீட்டு வரப் பார்க்கும்படி (நலிகின்ற) வருத்துகின்ற காலன் (என்னை) அணுகாதபடிக்கு உன்னுடைய அருளையும் அன்பையும் எனக்குத் தந்து உதவுக. வேடர்கள் மீது வெகுண்டு குறமாது) வள்ளியுடன் உறவு கொண்டாடியும், (இருள் நாட்டவரை) == அஞ்ஞான நிலையினராம் அசுரர்களைச் சிவந்த ஒளிவீசும் வேல்கொண்டு போர்செய்து, (தேவர்களைச்) சிறையினின்றும் மீட்டு அத் தேவர்களின் ஆண்டவன் தலைவனாம் இந்திரனை வாழும்படியாக வாழ்க்கை நிலையாக வைத்த கலைஞனே! வேறு உருவில் (கூலியாள் உருவில்) சென்று மதுராபுரியில் (மண் சுமப்பவனாக) விளையாடி, வைகை யாற்றில் மணலைச் சுமந்த மழு ஏந்தினவரும், என்னுடைய தந்தையும், திரிபுரத்தினுடைய (ஏட்டை) அல்லது மேட்டை மேன்மையை (பெருமையை) எரித்து ஆண்ட சிவலோகனும், இடபவாகனத்தில் ஏறினவரும் ஆகிய சிவபிரானது இடது பாகத்தைக் கொண்டதாய்;