பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/811

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கருமுகில் பொருநிற அரிதிரு மருமக.

  • கருனையில் மொழிதரு முதல்வோனே; முருகலர் திருவுறை யமரர்கள் சிறைவிட

முரணுறு மசுரனை முனிவோனே. t முடியவர் வடிவறு சுசிகர முறைதமிழ் முதுகிரி வலம்வரு பெருமாளே, (2) 756. அருள் பெற தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதத்த தனதான பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி பறியக்கை சொறியப்பல் வெளியாகிப். # பட்லைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க பழமுற்று X நரைகொக்கி னிறமாகி, விசைபெற்று விருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு மெலிவுற்று ரல்பற்று தடியோடே. வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை விடுவித்து னருள்வைப்ப தொருநாளே. o அசைவற்ற் நிருதர்க்கு மடிவுற்ற பிரியத்தி னடல்வஜ்ர கரன்மற்று முளவானோர்.

  • தனக்கு முருகவேள் உபதேசித்தது:

"அன்புற உபதேசப் பொருள் ஊட்டி மந்திர தவஞானக் கடலாட்டி என்றனை" என்றார் பிறிதோரிடத்து - திருப் 314 எனைமரண மாற்றிய கருணைவார்த்தை யிருந்தவாறென்" - திருப்புகழ் 1061. t முடியவர் வடிவறு சுசிகரம் உறை முதுகிரி உயிர் விடும் பிராணிகளுக்கெல்லாம் பார்வதி தேவியார் தமது ஆடையால் விசி இளைப்பாற்றச் சிவபிரான் ஐந்தெழுத்தை உபதேசம் செய்து அப் பிராணிகளுக்குத் தமது சிவருப்த்தைத் தந்தருளும் தலம் திருமுதுகுன்றம் துளசினால் அம்மை வீசித் தொடையின் மேற் கிடத்தித் துஞ்சு மாசில: உயிர்கட் கெல்லாம் அஞ்செழுத் தியல்பு கூறி ஈசனே தனது கோலம் சந்திடும் இயல்பால் அந்தக் காசியின் விழுமிதான முதுகுன்ற வரையும் கண்டான் கந்தபுரா - வழிநடை 13. 4. படலை படலம் x "தலைமயிர் கொக்குக் கொக்க நரைத்து" - திருப் 47-பக்கம் 622. O அசைவு - சலிப்பு.