பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நறிய வார்குழல் வான நாட் டரம்பை மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து களிகூர. நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து நசையொ றாதழு தாகமாய்த் தழுங்கி யிடர்கூர. மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து t கவிடு கோடியின் மேலுமாய்ப் பரந்து வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த வடிவேலா. மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து மதியு லாவிய மாடமேற் படிந்த வயல்கள் மேவு நெல் வாயில்வீற் ருந்த பரும்ாளே.(1) விருத்தாசலம். திருப்புகழ் எண் 234 பாடலையும் இத்தலத்துக்கு உரியதாகக் ள்ளலாம். (ரெயில்வே ஸ்டேஷன், விழுப்புரத்துக்குத் தென்மேற்கு 34 மைல்; கூடலூருக்குத் தென்மேற்கு 35 மைல். சிதம்பரத்திலிருந்து 28 மைல், மூவர் தேவாரமும்பெற்றமுதுநகர். ஸ்தலபுராணம் உண்டு.) 754. விலைமாதர்களின் உறவு அற தனத்தானன தானன தாணன தனத்தானன தானன தாணன தனத்தானன தானன தாணன தனதான குடத்தாமரை யாமென வேயிரு தனத்தார்மதி வாணுத லாரிருள் குழற்காடின மாமுகில் போல்முது கலைமோதக்

  • ஏழிசை - குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்: சத்த சுரம் ஷட்ஜம், இடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிடாதம் (ச ரி க ம ப த நி).

1 சூரன் பல கிளைகளை உடைய மாமரமாய் கடல் நடுவில் கவிழ்ந்து நின்றான். கவடு கோத்தெழும் உவரி மா - திருப்புகழ் 1062. "துன்னு பல் கவடு போக்கிச் சூதமாய் அவுனன் நின்றான். (தொடர்ச்சி பக்கம் 247) கந்த புராணம் 4-13-468. 26