பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநெல்வாயில் திருப்புகழ் உரை 245 தாத்தரிதாகிட சேக்' என்று சிறந்த நடனம் செய்கின்ற திருவடிகளை உடைய சிவபிரான் தந்த குமரேசனே! அம்புக் கூட்டங்களைக் கொண்டு திரியும் வேடர்களின் மிக்க அமுதன்ன மயில் இயல் வள்ளியின் மணவாளனே! (வேத்தமதாம்) - வேத்தியமதாம் அறியப் படுவதான வேதங்கள் ஒலிசெயும் சீரான திரு வேட்களத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (உழல்வேனோ) திருநெல்வாயில். 753. அறிவு இல்லாதவர்கள், (சனர்) இழிவானவர்கள், பேச்சு இரண்டு பேசும் நாவினை உடையவர்கள் (சொன்ன சொற்களை மாற்றுபவர்கள்), உலோபிகள். கெட்ட குணங்களையே கொண்டு மிக்க பாபச் செயல்களைச் செப்பவர்கள், மாதர்களுக்கு (பொது மகளிருக்கு) ஆபரணங்களைப் புனைந்து பார்க்கும் அறிவிலிகள், அசடர்கள், பூமியில் வீண்காலம் போக்குபவர்களாய்ப் பிறந்து திரிகின்ற மனிதர்கள், பெண்கள்மீது (காம) இரக்கம் கொண்டு அழிந்துபோகும் ஆசை மனத்தினர்கள் நீதி நூல்களின் பயன்களை அறியாதவராய் நன்னெறியிற் போகாதவர்கள், சூதாட்டத்தால் சூதினால் பொருள் கவர்ந்து அப் பொருளைச் சேகரிக்கும் (பூரியர்) கீழ் மக்கள், ஆசைப் பெருக்கால் உலக நிலையையே (உலக இன்பத்தையே) விரும்பும் மூடர்கள் இத்தகையோரிடம் சென்று நல்ல தமிழ்ப் பாடல்களை பாடிக்காட்டி - நினைவு தேய்ந்து பாழாக, r- வாட்டமுற்று, கண்பார்வையும் 'மங்கிப்போய், தரித்திரம் என்கின்ற நெருப்பிலே கிடந்து நெளிகின்ற பெரிய புழுப்போல ஆன என்மீது இரங்கி இரக்கங்கொண்டு அருள்புரிவாயாக.