பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேட்களம்) திருப்புகழ் உரை 243 வெளியிலே எட்டுத் திசைகளிலும் சூரனாய் நின்று சண்டைசெய்து (சேவலாய் மாறி நின்ற கொடியைக் கையிலேந்திப் புகழ் விளங்க உலவின பெருமாளே! வெற்றியும் சத்தியமும் விளங்கும் பெருமாளே! திருவேட்களம் எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (தோள், முகம் ஆறு, பாதம், கோலம், பார்வை மறவேன்) 752. ஒரு சிறிய அளவுகூட வாக்கு தவறாத (மனைவியுடன்) நடத்தும் (இல்லற வாழ்க்கையைப் பெரிதென மதிக்காமல் (அறிவுகெட்ட) பேர்வழிகள் யாராயிருந்தாலும் அவர்களை எல்லாம் ஏற்று அனுபவிக்கும் ஒழுக்கத்தை உடைய (பொது மாதர்களின்மீது) மிக்க அன்பைப் பூண்டு (அவர்களை) அனுபவிக்கும் - பாத்திரம் இவன் என்று (பிறர்கூற), மூண்டு எழுகின்ற ஆசைகளிலே ஈடுபட்டு, (ஆடகம்) பொன் (பொருள்) அதைத் தேட பூமியிடத்தேயுள்ள மூர்க்கர்களை (உலோபிகளையே) எனது பாடலில், பாற்கடலிற் (பள்ளி கொண்டிருக்கும்) திருமாலே இவன் என்று புகழ்ந்து திரிவேனோ! ஆறு சாஸ்திரங்களையும் கடந்து மனம் லயப்பட (மனவேகம் ஒடுங்கும்படி) வைத்த சாமர்த்தியம் உள்ளவர்கள் (மனோலயம் சாத்தியம் ஆகும்படி செய்த பெரியோர்கள்) விரும்பிப் போற்றும் திருவடிகளை உடைய வேளே! (242-ம் பக்கத் தொடர்ச்சி) ಸಿ: பற்றிச் சைமினி முநிவர் இயற்றிய சாஸ்திரம். (6) உத்தர மாஞ்சை வேதத்தின் பிற்பகுதியான ஞானகாண்ட விசாரணைச் சாத்திரம் (பிரமசூத்திரம் முதலிய நூல்கள். பிரமசூத்திரம் - வேதாந்த சூத்திரம் வேத வியாசரால் செய்யப்பட்ட நூல்) x சாத்தியர். தேவருள் ஒருவகையினரும் சாத்தியர் எனப்படுவர். 'விசுவதேவர் வசுக்கள் சாத்தியராதி விண்ணவர்" சேது புராணம் - கலிதீர்த்த - 7.