பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமாணிகுழி திருப்புகழ் உரை 237 750. சந்திரனுக்கு ஒப்பு என் சொல்லும்படியான ஒளி பொருந்திய முகம், சிற்ந்த மகாநதியாகிய (அல்லது ஆகாய மகா நதியாகிய கங்கையிலே உலாவும் சேல் என்று கூறும்படியான கTை, ள்ள நீண்ட கூந்தல் - இவைதமை உடைய அழகிய மாதர்களின் இரண்டு கொங்கைகளிலே முழுகி மதிப்பு வைத்திருந்த (பூதரம் ஆம் ஆம்) மலைகளே இவை யாகும், ஆகும் என்று (மனோலயர்) அவைகளிலே மனம் லயப்பட்டவராய்ச் (செருக்கி) பெருமிதம் உற்று அவைதம் மேல் விழுந்து நாள்தோறும் மிக நன்றாக வடித்தெடுக்கப்பட்ட தேன் போன்ற மொழியும், வாயிதழ் ஊறலுமே அநுபவிக்கின்ற (பண்டம்) ஒரு பொருளாகிய நாயனைய அடியேன். (பதித்த நூபுரம்) (நூபுரம்) சிலம்பு சூழ்ந்துள்ள சீரான பாதமாம் சிறந்த மலரும், ஆயுதங்களுள் ஒன்றாகப் பொருந்திய சீரா (உடைவாளும்), (கலை) ஒளி கொண்ட, பருத்த தோள்களோடு, பன்னிரண்டு (தோடுகள்) காதணிகள் தங்கி விளங்கும் காதுகள். பாம்பை அடக்கும் மயி லும், வேலும், சேவலும், கூர்மைகொண்ட சூலாயுதமும், ஒளி வீசுகின்ற நீண்ட வில்லைப்பிடித்த வெற்றியையும் நான் விரும்பித் தியானிக்காது பாழான எண்ணங்களிலும் செய்கைகளிலும் மயக்கம் கொள்ளலாமா! (கொள்ளலாகாது என்றபடி) கொதித்து மேலெழுந்து வருகின்ற பெரிய சூரர்கள் சூழ்ந்துள்ள சேனைகளைப் பொடியாக்கியும் குதிரைகள், பெரிய தேர்கள், யானைகள் இவைகளைக் கலக்கியும், ஊர்களையும் நகரங்களையும் தீ மூண்டு எரியும்படிச் செலுத்தின வஞ்சகங்கொண்ட வேலனே! (236ஆம் பக்கம் - தொடர்ச்சி) X" வஞ்சவேல்" - வேல் - அடியார்களுக்கு நிழலாகவும் பகைவர்க்குத் தழலாகவும் இருக்கும் . இதுவே இறைவன் தன்மை வாரமதாம் அடியார்க்கு வாரமாகி, வஞ்சனை செய்வார்க் கென்றும் வஞ்சனாகும் சீரரசை" என்றார் அப்பர் - (6.86-). " வஞ்சவேல் கொடு முனிபவ" என்றார் பிறிதோரிடத்து (திருப்புகழ் 773)