பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/789

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவெண்ணெய்நல்லூர். (திருவெண்ணெய் நல்லூர் ரோட் ஸ்டேஷனிலிருத்து வடக்கு 4 மைல் பண்ணுருட்டிக்கு மேற்கு 15 மைல், திருக்கோவலூருக்குப் போகும் பாதை விழுப்புரம் ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து 12-மைல் திருக்கோவலூரி லிருந்து 14 மைல். சுந்தரமூர்த்திஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 748. யோகநிலை தனதன தத்தன தனதன தத்தன தனதன தததன தனதன தததன தனதன தததன தனதன தததன தனதான பலபல தத்துவ மதனை யெரித்திருள் பரையர ணப்படர் வடவன லுக்கிரை படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள விடமேவிப். பவன மொழித் திரு வழியை யடைத்தொரு பருதி வழிப்பட விடல்கக ணத்தொடு பவுரி க்ொளச்சிவ மயமென முற்றிய பரமூடே கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத வொலிமல்லி யத்திரு நடன மியற்றிய கனக சபைக்குளி லுருகி நிறைக்கட லதில்மூழ்கிக்கவுரி மினற்சடை யரனொடு நித்தமொ டனக t சகத்துவம் வருதலு மிப்படி கழிய நலக்கினி நிறமென விற்றுட லருள்iாயே புலையர் பொடித்தளும் அமண ருடற்களை நிரையில் கழுக்களி லுறவிடு சித்திர புலவனெ னச்சில விருது படைத்திடு மிளையோனே.

  • இருவழி யடைத்தலும் நடனப்பதம் சேர்தலும்

- பாடல் 647-பக்கம் 514. மூலமும் கீழ்க்குறிப்பும் t சகத்துவம் வருதல் - உலகத்தொரு நீயாகத் தோன்றும் நிலை - திருமுருகாற்றுப்படை - 294 'உலகத்திடத்தே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோன்றும்படி" - என்பது ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை பாடல் 173 பக் 398, 402 பார்க்க

  1. சமணர் - திருநீற்றை விலக்குபவர்கள் - 'நீற்று மேனிய ராயினர் மேலுள்ள காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரை"- சம்பந்தர் 3-108-8