பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவனுர்) திருப்புகழ் உரை 213 (பாரமார் தழும்பர்) தேவியின் மிக்க கொங்கைப் பாரத்தின் தழும்பு கொண்டவர், செம்பொன் போன்ற திருமேனியை உடையவர், கங்கை வெண்ணிறத்த கபால. மாலை, கொன்றை, தும்பை, (சிறு தாளி) ஒருவகைச் செடி(ப்பூ) பாரமான பாம்புகள், (சிந்து வாரம்) நொச்சி, (ஆரம்) கடம்பு (என்பு) எலும்பு, அடம்பு - ஒருவகைக் கொடிப் ஆ (பானல்) கருங்குவளை, (கூவிளம்) வில்வம், கரந்தை, அறுகுடனே சேர்ந்து விளங்கி மணக்கும் (நம்பர்) பெருமான், ஈசனார் ஆகிய சிவனது இடது பாகத்திற் சிறந்து விளங்கும் குளிர்ந்த (அரவிந்த) தாமரையில் வீற்றிருக்கும் மாது பார்வதி தேவியின் பெருஞ் செல்வமே! தேவர்கள் எல்லாரும் ஒன்றுகூடிப் பூமியில் வந்து வணங்கும் தேவனுாருக்கு விளக்கம் தர வந்துள்ள் பெருமாளே! (ஆவல்திர என்று நின்று புகழ்வேனோ) 741. காண்பதற்குக் கூடாததும், உருவமும் அருவமும் கொண்டதும், பேசுதற்கு முடியாததும், (பலவித உரை விளக்கங்களுக்கும் இடம் தருவதும் (அல்லது பேசும் திறத்தைத் தருவதும்), காணப்படும் நான்கு மறைகளுக்கும் (வேதங்களுக்கும்) முடிவான பொருளாய் நிறைந் து நிற்பதும் (மண் நீர் தி காற்று. ஆகாயம் என்னும்) ஐம்பூதங்களால் ஆய. (இந்த உடல் மீதுள்ள பாசத்திலே (ஆசையிலே) இருந்து விளங்குவதும், மாயப்பொருளாய் நின்று இவ் வுடலால் அறிய முடியாத வகையில் இருப்பதுவும், t (காயமானவர் - காய சித்திபெற்றவராலும் தம் எதிரே அவரைப்போல மனிதனாய் வந்து பேசினாலும் - இன்னாரென அறிந்து

  • உரையே தருவது - ஆகமப் பிரமாணத்தால் அறியப்படுவது.

1. காயமானவர் எதிரே அவரென வந்து பேசிப் பேணொணாத து" சரீரத்தை உடைய மனிதர்கள் முன்னே பக்குவ காலத்தில் அவரைப் போல மானிடச் சட்டை சாத்திவந்து உபதேச முதலியவை செய்தும். மனிதருள் ஒருவராக மதிக்கமுடியாது.