பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவனுர்) * திருப்புகழ் உரை 211 பகையைச் சொல்லி வந்து எதிர்த்த சூரருடைய சேனைகள் மங்கி அழிய, கப்பல்கள் உலவும் கடலைக் கோபித்ததும், (சண்டவித) விரைவு - கோபம் இவை வாய்ந்ததும், கூர்மை கொண்டதும் வெற்றி கொண்டதுமான வேலை ஏந்தியவனே! கொன்றை, தும்பை இவற்றாலாய மாலைகள், வில்வக் கொழுந்து, பாலசந்திரன் (இளம்பிறை), விஷம் பொங்கி எழும் பிளப்பு வாயையுடையதும் சிறிக் கோபிப்பதுமான (மாசுணம்) பாம்பு, (கரந்தை) திருநீற்றுப் பச்சை, கங்கை ஆறு இவைகளைச் சடையிற் கொண்ட (நம்பர்) பெருமான் - சிவனுக்குத் (தேசிகா) குருமூர்த்தியே! கடப்பமாலை அணிபவனே! தேவர்கள் யாவரும் ஒன்றுகூடிப் பூமியிலே வந்து வணங்கும் தேவனுார் விளங்க வந்த பெருமாளே! (யான் அவா அடங்க என்று பெறுவேனோ) 740. தாரகாசுரன் நிலை பெயர்ந்து வீழ்ந்து (மாள), வேருடன் பறிபட்டுச் சிறந்த மேருமலையும் குலுங்க) நடுக்கம் கொள்ள, முற்றின மீன்களைக் கொண்ட சாக ரோதையங் குழம்பி (அம் ஒதை சாகரம் கு ம்பி) 素做微 ஆரவாரமும் கொண்டுள்ள கடல் கலக்க முற்று பெருந் தீயிற்பட அன்று கூரிய வேலைச் செலுத்தின. கடம்பனே! மதநீர் ஒழுக்கையும் ஆரவாரத்தையும் கொண்டதும், தேவலோகத்தில் உள்ளதும், (கும்பம்) மத்தகத்தைக் கொண்டதும் ଈ୪T (அசலவாரண) மலைபோன்ற ஐராவதம் என்னும் ಸಿ து வீற்றிருந்த (மானையாளும்) (மானாள்) மான்போன்ற தேவசேனையும், (நின்ற குன்ற மறமானும்) குன்றம் நின்ற வள்ளிமலையில் இருந்த வேடப்பெண் மான்போன்ற வள்ளியும் . (ஆக இருவரும்) ஆசை மிகவும் கொள்ளும் நண்பனே என்றும் சிற்ந்த மயில்வ்ாகனனே, கந்தனே என்றும் என் ஆச்ைதிர என்று நான் மனம் ஒருமைப்பட்டு நின்று புகழ்வேன்! (அல்ல்து) என்றைக்கும் மனம் ஒருமைப்பட்டு நின்று புகழ மாட்டேனோ!