பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திருவக்கரை, (தென்னாற்காடு ஜில்லாவி லுள்ள மயிலம் ரெயில்வே ஸ்டேஷனி லிருந்து 3 மைல் சென்று. மயிலம் சேர்ந்து அங்கிருந்து வானூர் போகும்வழியில் 41/2 மைல் சென்று, அங்கு வழியைவிட்டு வயல் வழியாகச் செல்லும் வண்டிப் பாதையில் 5 மைல் சென்றால் இத்தலத்தை அடையலாம். னசம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.) 727. அடிமைப்பட தனதன தத்தன தனதன தத்தன தனதன தத்தன தனதானா கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ தொழிவ துணைச்சிறி துரையாதே. கருவழி தத்திய மடுவ தனிற்புகு கடுநர குக்கிடை யிடைவிழா, உலகு தனிற்பல பிறவி தரித்தற வுழல்வது விட்டினி யடிநாயேன். *உனதடி மைத்திரள் அதனினு முட்பட வுபய மலர்ப்பத மருள்வாயே! குலகிரி t பொட்டெழ அலைகடல் வற்றிட நிசிசர னைப்பொரு மயில்வீரா. குணதர வித்தக குமர புனத்திடை குறமக ளைப்புணர் மணிமார்பா, அலைபுன லிற்றவழி வளைநில வைத்தரு மணிதிரு விக்கரை யுறைவோனே. # அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன அவைதரு வித்தருள் பெருமாளே.(1)

  • 'இவ் வேண்டுகோள் அருணகிரியார்க்கு நிறைவேறிற்று என்பதற் குச் சான்று. இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமிலேனை யன்பாற் கெடுதலிலாத் தொண்டரிற் கூட்டியவா கிரவுஞ்ச வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன்" என வரும் கந்தரலங்காரம் (100)

f பொட்டாக வெற்பைப் பொருத கந்தா" கந்தரலங்-34

  1. இது முருகன் திருவருட் பெருமையைக் காட்டும் அருமையான அடி மனப்பாடஞ்செய்ய வேண்டிய அடி

W