பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மதுராந்தகம் (ரெயில்வே ஸ்டேஷன். செங்கற்பட்டுக்குத் தெற்கு 15 மைல்) 722. திருவடியைப் பற்ற தனதாந்த தத்த தனண தத்தத் தந்த தத்த தந்த தனதான குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக் கிந்த்ரி யக்*கு ரம்பை வினைகூர்துார். குணபாண்ட முற்ற கிலமெ ணக்கைக் கொண்டி ளைத்த யர்ந்து சுழலாதே; உதிதாம்ப ரத்தை t யுயிர்கெ டப்பொற் கிண்கி னிச்ச தங்கை விதசித. உபயாம்பு யப்பு னையையி னிப்பற் றுங்க ருத்தை யென்று தருவாயே கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக் ரந்த ரித்த கொண்டல் மருகோனே. கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற் பைம்பு ணக்க ரும்பின் மணவாளா; மதனாந்த கர்க்கு மகவெ னப் பத் மந்த னிற்பி றந்த குமரேசா. மதுராந்த கத்து Xவடதி ருச்சிற் றம்ப லத்த மர்ந்த பெருமாளே.(1)

  • பொருந்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா" . அப்பர் - f_42-1.

1. உயிர் கெட ஆன்மத்துவம் நீங்க

  1. முருகவேள் தாமரையிற் பிறந்தது. திருப்புகழ் 133, 150, 1005, 11:52, 1267, 316ன் கீழ்க்குறிப்பு x (பக்கம் 284) பார்க்க

X மதுராந்தகத்தில் வடதிருச்சிற்றம்பலம் எனப் பெயர் வழங்கின முருகனாலயம் ஒன்று அருணகிரியார் காலத்து இருந்தது போலும். |