பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரமேரூர்) திருப்புகழ் உரை 157 அறிந்து பார்க்க, அறிந்து பார்க்க அறிய முடியாத (உனது) திருவடிகளை அறிய அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிய வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக, கிரெளஞ்சம் ஆதிய மலைகள் தவிடுபொடியாக அசுரர்களுடைய ஊர்கள் அழிவுபெற, மகர மீன்கள் உள்ள கடல் சேறாகப், பழைய சூரனும் அழிவுற, பேய்கள் நடனம் செய்ய, விஜயலக்ஷ்மி மகிழ்ச்சிகொள்ள, (அரக்கர்களுடைய) தலைகள் சிதறிவிழ, உணவுதேடி வந்த நாய்களுடன், நரிகளும், காக்கைகளும், பசி நீங்க, ரத்த ஆறு அலைமோதி ஒட, யமனும் அச்சமுற்று (உனது) திருவடியைத் துதிக்க, மயிலில் ஏறி. தாமரை போன்ற (உபயம்) மகிமை வாய்ந்த திருக்கரத்து வேலாயுதத்தை விரைவிற் செலுத்தின முருகனே! (வட மேருநகரி) உத்தரமேரூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! தேவர்கள் பெருமாளே! (அறியும் அறிவூற அருள்வாயே) 719. தோல், எலும்பு, (சீ) சீழ், நரம்பு, பீளை, நெருங்கியிருக்கும் கோழை, மேலெழும் ரத்தம் இவை ஒரு பிண்டமாய் உருண்டு ஒரு வடிவு ஏற்பட்டு. கண்ணுக்குப் புலனாய (பருத்த), (பங்க) பாவத்துக்கு இடமான, (காயம்) உடலை வீணாகச் சுமந்து நான் மெலிவுற்றுத் தளருகின்ற இந்த (நோய்) பிறவிநோய் விலகி என் துயரம் முடிவுபெற விஷத்தை உண்ட தலைவன் (சிவன்), (அகண்ட லோகம் உண்ட மால்) விரிந்த (அல்லது எல்லா) உலகங்களை(யும்) உண்ட திருமால், பிரமன், வேதங்கள், ஆகமங்கள் இவையெல்லாம். புகழ்கின்ற உனது திருவடிகளையும்.