பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரமேரூர்) திருப்புகழ் உரை 155 (சமம்) வாதப்போர் செய்யும், பரமத (புறமதங்களான) (சமணம், புத்தம்) இவை தம் (சாதல) நசிவுக்கு (இறப்புக்குக்) காரணமா யிருந்தவனே! (சமயம் ஆறிருதேவத) ஆறு சமயங்களுக்கும் உரிய (இருதேவத) பெரிய தேவனே! அல்ல்து அகச்சமயம் ஆறு, புறச்சமயம் ஆறு என்ற பன்னிரு சமயங்களிலும் உள்ள தெய்வமே சமயங்களுக்கெல்லாம் (நாயகனே) தலைவனே! அல்லது "நல்ல சமயத்தில் உதவும் நாயகனே! அழகிய மயில்மேல் வரும் (முது) பேரறிவு வாய்ந்த வீரனே! எல்லா லோகங்களும் குற்றமற்ற எல்லா வேதங்களும் (மறைகளும்) தொ ழுகின் ற பெருமாளே! (சமரமாபுரி) திருப்போரூர் என்கிற பெரியநகரில் வீற்றிருக்கும் பெருமாளே! உத்தரமேரூர். 718. (சுருதி) வேதங்கள், (மறைகள்) உபநிஷதம் ஆகமங்கள், (இரு நாலு திசையில் அதிபர்) எட்டுத் திக்குப் ப்ாலகர்கள் (இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்), (முநிவோர்கள்) முநிவர்கள், குற்றமில்லாத (ரிஷிகள்) இருடிகள் ஏழுபேர் (அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்), சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள். சொல்லுதற்கு முடிவில் முடியாத (பிரகிருதி புருஷர்) பிரபஞ்ச மாயா அதிகாரிகள், (நவநாதர்கள்) - சத்தியநாதர், சதோக நாதர், நாதர், அனாதி நாதர், வகுளி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கடேந்திர நாதர், கோரக்க நாதர்), ஆகிய பிரதானசித்தர் ஒன்பதின்மர், தூரத்தில் உள்ள நஷத்திர உலகில் உள்ளவர்கள், வேதம் வல்லோர்கள். அருமையான சமயங்கள் கோடிக் கணக்கானவை, தேவர்கள், சரணர்கள் (அடியார்கள், வீரசைவப் பெரி. யோர்கள்) அல்லது சாரணர் - (பதினெண் கணத்துள் ஒரு சாரார்) நூற்றுக் கோடிபேர், திருமால், பிரமா - ஒரு கோடி பேர் - இவர்களெல்லாம் கூடி. To: "ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே." - பாடல் 1.201.