பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/704

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை நகர்) திருப்புகழ் உரை 145 713. கற்றுள்ள நூல்களும் மதங்களும் விளக்கம் தந்து (கொடுக்காத) சொல்லாத (விந்து) - சிவ தத்துவமாகிய உண்மை ஒளியானது என்றும் நிலைத்திருக்கவேண்டி (மாசிக் கபாலமன்றில்) மேகம்போலப் படர்ந்த மண்டை ஒடாகிய வெளியிடத்தும், மூக்குக்குள்ளும் ஒடுகின்ற பிராணவாயுவாகிய ஒன்றை, (மடை மாறி) அது) செல்லும் மதகு வழியை மாற்றி. (யோசித்து) (சுழு முனையிற்) கூட்டி (அதனால்) (அயர் உடம்பை) தளர்ச்சியுறும் உடம்பின்மீது நேசம் வைத்து (உறாது) சிவயோக நிலையில் நில்லாது அலைந்து, மயிர்த்தொளை எங்கும் உயிர் போகும் வண்ணம். (கரும) யோக சமாதி நிலையைப் பூண்டு, மோகம் என்கின்ற பேய் நிரம்பியுள்ள இந்த உலகிலே இறந்து போதல் - என்றைக்கும் நீங்காதா! (அலை) வீசுகின்ற பயோதி கடல் (துஞ்ச) வலிமை குன்ற, பிரமன் என்கின்ற குயவன் அஞ்சி நிற்க, மேலே எதிர்த்து வந்த சூரனைச் சங்கரித்த ஒளிவேலனே! வீரம் உள்ளன என்னும் கீர்த்தியைப் பெற்றுள்ளன. வான (மன்மதனது) ஐந்து மலர்ப் பாணங்களால் (காம) மயக்கம் கொண்டு (வேடிச்சி) வள்ளியின் காலில் அன்று விழுந்து வணங்கினவனே! (கூச்சம்) அச்சம் அடைந்து போய் ஒதுங்கும்படி, மாமனாகிய தக்கனைத் தடைபடாது தலை யரிந்தவரும், எளிய திரிபுரத்தைப் பகைத்து எரித்தவருமான சிவன் தந்த இளையோய்! கோழிக்கொடி கொண்ட அழகிய குமரனே! (கண்ட) வீர! கோடைப்பதியில் வாழ்கின்ற பெருமாளே! (மாய்வ தென்றும் ஒழியாதோ)