பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/654

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெற்றியூர்) திருப்புகழ் உரை 95 691. (சொருபப் பிரகாச) பிரகாச சொரூபனே! (ஒளி உருவனே!) (விசுவரூப) சராசரம் அனைத்தையும் கொண்ட பேருருவனே! (பிரமாக) பிரமப் பொருளாய் நின்று - முழுமுதற் பொருளாய் நின்று (நிசசுக) உண்மையான சுகத்தைத் தரும்பொருளே! (விப்பிரதேச = பிராமண தேஜசு கொண்டவனே! (ரச சுப) இன்ப சுபப் பொருளே! (மாய்ா) அழியாத (துலியப் பிரகாச) சுத்த ஒளியே! (மதசொலியற்ற) மதங்களின் (சோலி) தொந்தரவைக் கடந்த - ரசா - சவித - தொகை - விக்ரம - இன்பம் கூடிய வகையதான பராக்ரமத்தை உடையவனே! மாதர்களின் வயிற்றினிடையே ஊறுகின்ற. கருவிற் பிறவாதபடி, உருவில் (உனது) திருவுருவத்தில் (பிரமோத) விரும்பத்தக்க திருவடிகளை ஏத்திடு போற்றுகின்ற) இராகவகையதில் - கிதவகைகளில் (அல்லது ஆசை வழிகளிலே) (மீறி) மேம்பட்டவனாய் கருணை ஒளியனே! உன்னுடைய திருவருள் கூடுவதால் குற்றமிலாத சிவகதியை (நான்) பெற்றுத் துன்பங்களான யாவற்றையும் கடக்கமாட்டேனோ! ( நிறமுள்ள குக்குட வார (ஆர) கொடி (கோழி (ஆர) விளங் றையும் கொடி.... அல்லது (வார குக்குட கொடி).... உனது அன்புத்கு உகந்த கோழிக் கொடின்யயும், போரில் ஆக்ரமாய் வெயில் ஒளி கொண்டதான வேலையும் பிடித்துள்ள திருக்கரங்களை உடைய ஆதியே! நி.ே மருகனே! (அல்லது கைத்தலங்களை உடையவனே! ஆதி அரியின் மருகனே). குமரனே கீர்த்தி விளங்கும் குகனே! (மா) அழகிய சிவசுப்பிரமணியனே! (அல்லது சிவ... (சுப்பிர) மிக்க தூய்மையான மாமணி. பேரொளியனே! குணம் முட்டர்) குணம் (முட்டு) குறைவுடையவரும் (அவா) ஆசைமிக்க வருமான அசுரர் குலத்துக்குக் (காலனே) யமனே! (திரு இலக்குமி (ஒற்றி உறாமருவு) சேர்ந்து பொருந்தியிருக்கும் நகரமான திருவொற்றியூரில் கடலலைக்குச் சமீபத்திலிருக்கும் ஆதிசிவன் அருளிய கு ழந்தையே!