பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெற்றியூரி திருப்புகழ் உரை 93 திருவொற்றியூர். 690. கரிய மேகம் போன்ற இருண்ட கூந்தற்பாரத்தையும், கயல்மீனுக்கு இணையான (மீனொடு சண்டைசெய்யும், வேல்போன்ற கண்களையும் உடைய மாதர்களின் காம போகங்களில் முழுகிக் கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவையைப் பூசியுள்ள கொங்கையிற் படியப் படுக்கையிலே காம சம்பந்தமான மன்மதநூலை கொக்கோக சாத்திரத்தைப் படிக்கின்ற வெறிகொண்டவன் (இவன்) என நாள்தோறும் உலகத்தினர் (விதரணமதான) சுறுக்கு என்று தைக்கும்படியான வகையில் (நகைகள்) பரிகாச மொழிகளைப் பேசி (இகழ்ந்து) விடுவதற்கு முன்பாக ஞானம்' என்பதை அளித்து அருளுக. திருமால், பிரமா, தேவர்கள், முநிவர்கள், சிவயோகிகள், ஆகிய இவர்கள் (உனது) திருப்புகழைப் பரவி ஒதப் பூமியில் - மேம்பட்டு விளங்கும் நடராஜப் பெருமான் போற்றுகின்ற குருராஜ மூர்த்தியே! தேவர் குலத்துக்கு அன்பனே! குமரேசனே! (பிரம) கபாலத்தைக் கையில் ஏந்தியவர், தேவி ஒரு பாகத்தினர், விளங்கும் பொன் மேனியை உடையவர் (ஆகிய சிவபிரான்) வீற்றிருக்கும் லகூழ்மீகரம் விளங்கும் ஆதிபுரி' (என்கின்ற திருவொற்றியூரில்) விளங்கிடும் ஜெய முருகனே! தேவர் பெருமாளே! (ஞான அருள்தாராய்)