பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடதிருமுல்லைவாயில் திருப்புகழ் உரை 87 வலிய அணைந்து கொவ்வைக்கனி போன்ற வாய் இதழைத் தருகின்ற நாளிலே (வந்துள்ளவருடைய) பொருளை யெல்லாம் (சூறைகள் கொண்டு) கொள்ளையடித்து பின்பு (அவருடைய பொருள் வற்றிப்போனபின்) மெளனமா. யிருந்தும், வீணாகச் சண்டைகள் போட்டு இகழ்ந்து பேசியும் மோசமே செய்கின்ற (தோதக வம்பியர்) வஞ்சனை செய்யும் துஷடர்கள் மீது காம இச்சைகொண்டு மனம் தளர்கின்ற மூடனாகிய பாதகனாகிய நான் நற்கதி பெறுவேனோ! ஆதிமூர்த்தியே என்று போற்றின தேவர்களுக்குப் பகைவனாயிருந்த சூரனைத் தாக்கி அவன் நன்கு பொடியாக மயிலில் ஏறிக் கோபித்த நெடிய வேலாயுதனே! இடையர்கள் வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் மகிழ்ந்து சென்று உரலில் ஏறி உறிமேல் உள்ள வெண்ணெயைத் திருட்டுத்தனமாகக் (கொடுபோத) கொண்டுபோய் வேண்டிய அளவு (அல்லது விரைவாக) உண்டவனுடைய (கண்ணனுடைய) மருகனே! வாது செய்துவந்த காளியை வென்ற ஆதிநாயகர், மேலிட்டு விளங்கும் (கைபோல வரும்) திரைகளை உடைய (வாரி ராஜன்) கடலரசு வருணனும் பணிகின்ற அழகிய நடன பாதங்களை உடையவர். நறுமணமுள்ள சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனோடு அழகிய இலக்குமி மார்பில் விளங்கும் திருமாலும் பணிந்து வணங்கின (வடதிருமுல்லைவாயில் இறைவர்) மாசிலாமணியீசர் மகிழ்ந்து அருளிய பெருமாளே! (கதி பெறுவேனோ)

அளை. நுகர்ந்தவன் போதம் நுகர்ந்தவன் - ஞான போஜனன் ஞானாகரன் - எனலுமாம்.