பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடதிருமுல்லைவாயில் திருப்புகழ் உரை 83 வேள்வி நிரம்பிய அல்லது விரும்பிய - மகவான் யாகபதியாகிய இந்திரனுடைய மகளானவளாம் தேவ. சேனையின் ஏடு ஆர் - மேன்மை நிறைந்த அழகிய சிறந்த மணவாளனே! (பொன்னின் நாட்டார்) பொன்னுலகத் தினரான தேவர்களுடைய பெருஞ் செல்வமென வந்துள்ள பெருமாளே! (உனதாம் அருளால் ஒர் சொல் அருள்வாயே) வடதிருமுல்லைவாயில். 686. (அணி செவ்வியார்) அழகில் செம்மை வாய்ந்த மாதர்கள், கடல் சூழ்ந்த பூமி, (தனம்) பொன் - ஆன பெண் . மண் - பொன் என்னும் மூவாசைகளை (நிவ்வியே) கடந்தே கரையேறிட - (அல்லது) - (அணி செவ்வியார் திரை சூழ்புவி). (திரை சூழ்புவி) கடல் சூழ்ந்த இவ் வுலகில் - (அணி செவ்வியார்) - அழகிய அல்லது ஆபரணம் அணிந்துள்ள செவ்வியார் - செம்மைவாய்ந்த மாதர்களுடைய (தனம்) கொங்கைகளை (நிவ்வியே) (நீங்கியே அல்லது) நீவியே - தடவுகின்றவனாய் - கரையேறுதற்கு அறிவிலாதவனாகிய அடியேனுடைய துயர் திருதற்கு வேண்டிய - திருவருளை வலிய அருள்வாயோ! அப்படி யன்றி நெடுங்காலத்துக்குக் கூட்டமான இருள் வீடாகிய பிறவி. களிலே (இடுமோ) கொண்டு விடுமோ (உனது அருள் இல்லையோ) - உனது திருவருள் என்மீது இல்லையோ? (இனமானவை அறியேனே) - உன்னொடு சம்பந்தப்பட்ட அடியார் கூட்டத்தை அறிந்தேனில்லையே! (அல்லது *இனமானவை - தக்க நல்லவைகளை அறியேனே எனலுமாம்) ( வில்லதா) சீரான வில்லாக - மகா மேருமலையைத் தரித்த = - (தாய்) பார்வதி தேவியுடன் :* அருணாசலகுரு அண்ணாமலையார்க்கு குருவாக வந்தவனே! வல்ல - தின்னிய மாதவமே - ப்ெரிய் தவநில்ையையே பெறும்படியான நற்குணத்தொடு கூடிய (சாத ஜாத) பிறப்பிற் கிடைத்த

  • இன வல்ல மான மன தருளாயோ'. என்றார் 689-ஆம் பாடலில்,