பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலங்காடு) திருப்புகழ் உரை 61 திகழ்கின்ற வேடத்துடன் காளியுடனே நடனம் ஆடின - ஜெகதீச - சங்கேச - நடேசுரர் - ஜெகதீசனும் சங்க மேசனுமான (அல்லது சங்கேசனுமான) நடேசப் பெருமானுடைய (தலமாகிய) திருவாலங் காட்டில் விளங்கி நிற்கும் பெருமாளே! (தாள் உ(ன்)னவே அருள் அருளாயோ) 678. (பொன்றா) அழிவிலாத வகையில், (மன்று ஆக்கும்) சபையில் புகழைப் பெருக்கும் (புதல்வரும்) பிள்ளைகளும், (நன்றாம் அன்று) நல்லபடி நிலையான உதவியன்று (நிலைத்த உதவியாகாது); (ஆர்க்கு இன்று உறுதுணை பொன்தான்) யாருக்கு இக்காலத்தில் உற்ற துணையாகப் பொன்தான் உள்ளது - அதுவும் நிலைத்திருப்பதன்று (மக்கட் செல்வம், பொருட்செல்வம் இவையெலாம் நிலையில்லாதன) - என்னும் இந்தக் கூத்தாட்டமே நிறைந்துள்ள (இப்) பூமியிலே - பூலோக வாழ்க்கையிலே (பொங்கா) கோபித்து எழும் கொடிய யமன் (உயிரைக் கொண்டுபோக) மறைந்து நிற்கும் அலங்காரம் கொண்டதாய் இங்கு மேம்பட்டு நிற்கும் இழிவு நிறைந்த கூடு ஒன்றைக் கொண்டு அதனுள் உறைகின்ற உயிர் இடங்கொள்ள. நிற்கின்றான் (இவன்), இப்போது உன்னைப் போற்றும்படியான நினைவுகூட இவனுக்கு) இல்லாமற் போயிற்று என்னும்படியான மேன்மையற்ற நிந்தையாடுகின்ற பேச்சு என்பது உண்டாகிப் பரவுதற்கு முன்பாக மனத்தாலும், (அஞ்சாலும்) மெய், வாய், கண், மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளாலும் உண்டாகிப் பெருகும் வினையான து (அதிகமாகாமல்) வளராமல், என்னிடத். தினின்றும் விட்டு நீங்க, (அவ்வினை ஒழிய) உனது திருவடிகளைத் தந்து என்னை ஆட்கொண்டு உனது திருவருளைத்தர நினைந்தருள வேண்டுகின்றேன்