பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திகழ்வேடங் காளியொ டாடிய t ஜெகதி சங் கேசந டேசுரர் திருவாலங் காடினில் வீறிய பெருமாளே. (1) 678. அருள் பெற தந்தானந் தாத்தம் தனதன தநதானா தாத்தம் தனதன தநதானந தாததம தனதன தனதான பொன்றாமன் றாக்கும் புதல்வரும் நன்றாமன் றார்க்கின் றுறுதுணை # பொன்றானென் றாட்டம் பெருகிய புவியூடே பொங்காவெங் கூற்றம் பொதிதரு சிங்காரஞ் சேர்த்திங் குயரிய புன்கூடொன் றாய்க்கொனன் டுறைதரு முயிர்கோல, நின்றானின் றேத்தும் படிநினை வுந்தானும் போச்சென் றுயர்வற நிந்தாகும் பேச்சென் பதுபட நிகழாமுன். நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை விஞ்சாதென் பாற்சென் றகலிட நின்தாள்தந் தாட்கொண் டருள்தர நினைவாயே

  • சிவபெருமான் காளியுடன் நிருத்தம் செய்தருளிய தலம் இத்தலம் 'ஆடினார் காளி காண ஆலங்காட் டடிகளாரே"

- அப்பர் 4-68-8. அண்டம் புழைபட இடத்தாள் நீட்டி யற்புதன் காளிதோற்க ஆடி யதிது - திருவிளை - அருச்சனை 13. t சங்கமேச என்பது சந்தம் நோக்கி சங்கேச என ஆயிற்றுப் போலும் சங்கமேசர் - காவிரியுடன் பவானி நதியும் கூடும் இடமாகிய பவானி (திருநணா) என்னும் தலத்துச் சிவன். இனி சங்கு என்பது ஒரு பேரெண். சங்கேச என்பதற்குப் பல உயிர்களுக்கும் தலைவனே எனவும் பொருள் கொள்ளலாம்

  1. பொன் தான் என்று எனப்பிரிக்க புவியிற் கூற்றம் பொதிதரு சிங்காரம் - இதனுடன்

'நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு என்னும் திருக்குறளை (336) ஒப்பிடுக.