பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவலங்காடு) திருப்புகழ் உரை 59 (மதிமாடம் வாணிகழ்வார்) மாடம் மதி - வான் - நிகழ்வார் (உபரிகை உள்ள) வீடுகள் - மேல்மாடம் உள்ள வீடுகள் நிலவையும் வானத்தையும் (அளாவி) விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி நிரம்பக்கொள்ளும் பாழான மனம் ஆம் (இது) - (உன) உன்னுடைய (மலர் பேணும்) தாமரைமலரை ஒத்த - (தாள்) திருவடியை, (உனவே) உன்னவே - தியானிக்கவே - (அருள்) உனது திருவருளை (அருளாயோ) பாலிக்க மாட்டாயோ! தனதானந் தானன தானன என்று - வேதம் கூறு சொல் - வேதஞ் சொல்லுவோரது சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் (அளி) வண்டுகள் - நிறைந்து சேர்ந்துள்ள குளிர்ந்த பூவாலாகிய நறுமண மாலைகளை அணிந்த மார்பனே! தகரேறங் காரச மேவிய குகதகர்-ஏறு-அங்கு ஆர்.அசம் மேவிய குக! (தகர்) நொறுங்குதலும் (ஏறு) அழிவும் - அங்கு - அப்போது - ஆர் - நிறையச் செய்த அசம் - ஆட்டின்மேல் மேவிய ஏறி அமர்ந்த - குகனே! (அல்லது ஆர் தகர் ஏறு அசம் மேவிய குக - அன்று நிறைவுடன் எழுந்த (தகர் ஏறு) ஆட்டுக்கிடா ஆகிய (ஆண் ஆடாகிய) அஜத்தின்மேல் ஏறி யமர்ந்த குகனே! வீரனே! (அம்பா குமரா) தேவி பார்வதியின் குமரனே! மிக்க (தகை) மேம்பாடு நிறைந்த அன்பு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெருஞ் செல்வமே! (தினம் ஆம் அன்பாக) - தினந்தோறும் (உன்மீது) கொண்ட அன்புடனே தினைப்புனத்தில் இருந்த ஒப்பற்ற (மானின்) மான்போன்ற வள்ளியுடைய (தோளுடன் ஆடிய) தோளுடன் விளையாடிய (தினை மா இன்பா) தினைமாவில் பிரியம் உடையவனே! மேலான தேவர்களின் தலைவனே! (அல்லது தலை + வாமா - தலைவனான வாமா - அழகனே) (மா) பெருமை

  • ஏறு - அழிவு படுதல் - "சிறருங் கணிச்சியோன் சினவலின் அவ் வெயில் ஏறு பெற்றுதிர்வன போல் "கலித்தொகை 2.