பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மதிமாடம் வாணிகழ் வார்மிசை மகிழ்கூரும் பாழ்மன மாமுன மலர்பேனுந் தாளுன வேயரு ாருளாயோ, தனதானந் தானன தானன எனவேதங் கூறுசொல் மீறளி ததைசேர்தண் பூமண மாலிகை யணிமார்பா.

  • தகரேறங் காரச மேவிய

குகவீரம் பாகும ராமி கு தகைசாலன் பாரடி யார்மகிழ் பெருவாழ்வே. தினமாமன் பாபுன மேவிய தனிமானின் தோளுட னாடிய #தினைமாவின் பாவுயர் தேவர்கள் தலைவாமா.

  • முருகவேள் ஆட்டுவாகனம் கொண்ட வரலாறு:- நாரதர் ஒரு வேள்வி செய்தார். அந்த யாகத்தில் ஒரு ஆடு எழுந்தது. அது வடவாக்கினி போலக் கொதித்தெழுந்தது. யாவரும் அச்சம் உற்றனர். அந்த ஆட்டை அடக்கும்படித் தேவர்கள் வேண்ட வீரவாகுவை அனுப்பி அந்த ஆட்டைப் பிடித்துவரச் செய்து அதன்மேல் முருகவேள் ஏறி விளையாடினர். அந்த ஆடு "ஒரு பேருருவு கொண்டே இப் புவியும் வானும் துரந்து....தாக்கி வரை பராகமெழ ஓடி திசைக்கரி இரிந்தலறி யேங்க - இரவி தேரொடு தகர்ந்து முரிவாக முட்டும் பாயும் யாண்டும் உலவுற்றே.உயிர்கட் கிறுதி செய்து பெயர்காலை வீரவாகு கோடவை பற்றி யீர்த்து. இளையவன் முன்னர் உய்த்தான் அன்று தொட் டமலமூர்த்தி ல் அணைய மேடம் ஊர்ந்தனன் ஊர்தியாக" கந்தபுரா - தகரேறுபடலம் சி-25).

நெருப்பிலுதித் தங்கட் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கட் கிடாயதனைச் சென்று கொணர்ந் தெங்கோன் விடுக்குதியென் றுய்ப்ப அதன்மீதிவர்ந்து எண்டிக்கு நடத்தி விளையாடு நாதா - கந்தர் கலிவெண்பா 1 குறமாது.....கவினாரு புயத்தில் உலாவி விளையாடி' என்றார் பிறிதோரிடத்து (பாடல் 293)

  1. முருகவேள் தினைப்ரியர் ...'தேமார் தேமா காமீ" - என்றார் 381 ஆம் பாடலில்