பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம்) திருப்புக ழ் உரை Os) இனிப்புள்ளவை இவை நிறைய நெருங்கியுள்ளன என்று கூறக்கேட்டு (அந்த) வேடுவன் (கண்ணப்பர்) எய்திடும் . சேர்த்திட்ட எச்சில் உணவைத் தின்று - (கண்ணில் ரத்தம் காட்டின) லீலாசலம் (சலம் லீலை) பொய்ம்மையான விளையாடலை விளையாடிய சுத்த மூர்த்தியாம் சிவகுமாரனே! (என்றும்), நாளும்-எப்போதும், இளையவனே என்றும், மூதுரையாம் திருமுருகாற்றுப்படையிற் சொன்னபடி மலை கிழவோனே' என்றும், ஒதினால் - (வெள்ளம் எனக் கலந்து) - வெள்ளக் கணக்காக எண்ணியதாய்க்கூடி நூறாயிர பேதமாய் வருவதான (எண்பத்து நான்கு) நூறாயிர பேதமாக வருவதான (சாதம்-ஜாதம்) பிறப்புக்கள் ஒழிந்தவாதான்.(ஒழிந்த ஆறு என்ன அற்புதம்தான்) ஒழிந்துபோயின.இது என்ன அற்புதந் தான்! (கெளமோதகி என்னும்) கதையும், (கன சாபமும்) பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும், (திகிரி) சுதரிசனம் என்னும் சக்கரமும், (வளை) பாஞ்ச சன்னியம் என்னும் சங்கமும், (வாள்) நாந்தகம் என்னும் வாளும் ஆகப் பஞ்சாயுதங்களை (ஐம்படைகளை) கை வசிவித்தகையில் தங்கவைத்த.(கள்வன்), நந்தகோபால மகிபன் என்னும் (கோகுலத்து) அரசனது தேவி - அசோதை மகிழ்ந்து வாழ (34 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி)

    • "நாந்தகம், சங்கு தண்டு, நாணொலிச் சார்ங்கம், திருச்சக்கரம் ஏந்து பெருமை இராமனை" பெரியாழ்வார் 4.1.2.

tt நந்த கோபாலன்-நந்தன் கண்ணபிரானை வளர்த்த தந்தை, நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் திருப்பாவை 18 நந்த கோபாலன் தேவி - அசோதை.கண்ணபிரானை வளர்த்த தாய் " கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக்குழவி " பெரியாழ்வார் 1-2-1