பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம்) திருப்புகழ் உரை 33 668. (வதனம்) முகம்-(சரோருகம்) தாமரை போலவும், (நயனம்) கண் (சிலிமுகம்) அம்பு அல்லது வண்டு போலவும், கொண்ட வள்ளி நாயகியின் தினைப்புனத்தில் போய் நின்று . வருவாயாக (எம்முடன், (எம்) ஊர் - (திருத்தணிகை) காதம்) பத்தும், (காதம்) பத்தும் (இந்த அரை) (அரைப்பத்தும்) ஐந்தும் - ←ጔ* இருபத்தைந்து மைல்தான் (நேராய்க் கணக்கிடின்) E. ஒன்றுமூரும். (ஒன்று உம் ஊரும்) - எம்பதி தணிகையும் உம் ஊர் வள்ளிமலையும் ஒன்று ஒன்றேதான்; (ஒன்றுக்கொன்று அவ்வளவு சமீபம்); (அல்லது ஒன்றும் ஊரும் - நம் இருவர் ஊரும் நெருங்கி நிற்கின்றன). (வயலும் ஒரே இடை) - (இரண்டு ஊருக்கும்) மத்தியில் ஒரே ஒரு வயல்தான் உள்ளது; என - என்றெல்லாம் கூறி (ஒரு கா இடை) - (வள்ளியைச் சந்தித்த அந்த) ஒரு சோலையிலே - (வல்லபம் அற்று அழிந் து) - உன் வலிமை தொலைந்து அழிந்து, (வள்ளிமீது) இச்சை பூண்டவனாய் "மடல் ஏறின மோகம் கொண்டவனே! எம்பெருமானே! (என்றும்) - (32 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) தானே திட்டிக் கிழியின் தலைப்புறத்தில் அவன்பேரை வரைந்து கைப்பிடித்து, ஊர் நடுவே நாற்சந்தியில் ஆகார நித்திரையின்றி. அக்கிழிமேற் பார்வையுஞ் சிந்தையுமிருத்தி, வேட்கை வயத்தனாய் வேறுணர்வின்றி, ஆவூரினும் அழல்மேற்படினும் அறிதலின்றி.மழை வெயில் காற்றால் மயங்கா திருப்புழி, அவ்வூரிலுள்ளார் பலருங்கூடி வந்து நீ மடலேறுதியோ’ அவளைத் தருதும், சோதனை தருதியோ என்ற வழி இயைந்தானாயின், அரசனுக்கறிவித்து அவன் ஏவலால் அவன் இணைந்து நையத் தந்து மடலேறு என்ற வழி ஏறுமுறைமை - பூளை, எலும்பு, எருக்கு இவைகளாற் கட்டிய மாலை யணிந்துகொண்டு அம் மாவிலேற. அவ்வடத்தை வீதியில் ஈர்த்தலும், அவ்வுருளை உருண்டோடும்பொழுது, பனங்கருக்கு அறுத்த இடமெல்லாம் இரத்தம் தோன்றாது வீரியந் தோன்றின், அப்போது அவளை அலங்கரித்துக் கொடுப்பது இரத்தங் கண்டுழி அவனைக் கொலை செய்து விடுவது.இவை புலவரால் நாட்டிய வழக்கென்றுணர்க" - தஞ்சைவாணன் கோவை பாடல் 101 உரை. "முருகன் மடலேறுவது - "மாநுடப் பெண்டிரைக் கடவுள் நயப்பது தொல்காப் - புறத்திணை 28 (பாடல் 697 கீழ்க்குறிப்பு).