பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் திருப்புகழ் உரை 51 கோபங்கொண்டு வஞ்சகமுள்ள கொக்கை (மாமரத்தைமாமரமாய் நின்ற சூரனை) சதித்து (அழித்து) பற்றி கைக்குள்-கைக்குள் பற்றி தன்வசப்படுத்தி (மயிலை வாகன. மாகவும், சேவலைக் கொடியாகவும் தன் வசம் கொண்டு), பொற்குலத்தை (பொன்மயமாம்) - குலம்-மலை (கிரவுஞ்ச கிரியையும்), (அதன்) குத்திரத்தை (அதன் வஞ்சக நிலையையும்) குத்திய குத்தி அழித்தவேலனே! குறத் தத்தைக்கு குறவர்குலத்துக் கிளியாம்) வள்ளியினுடையவும் அறத்து அத்திக்கு (கற்பியல் அற நெறியில் நின்ற யானை) தேவ சேனையினுடையவும் . முத்தாபரணம் அணிந்த தோள்களின் அழகுக்கு ஒப்பாகும் கரும்புக்கு ஒத்த குலமாகிய மூங்கிற் காம்பையுடைய கோழியின் வீரக் கொடியை உடையவனே! கதம் (கோபத்தையும்) சுத்த-சுத்தமான சுதை (வெண்மை நிறத்தையும்) சித்ரம் அழகையும் கொண்ட களிறு ஐராவதம் என்னும் யானைக்கு அரசனாம் தேவேந்திரனுக்குக் கற்பக விருகூடிங்கள் உள்ள சொர்க்கலோக அழகைக் தந்து உதவி புரிந்தவனே! (கடுக்கை) கொன்றையும், கட்செவி (பாம்பும்) உள்ள (கற்றைச்சடை) திரண்ட சடையை உடைய சிவனது, பக்கக் கொடி-பாகத்து அமர்ந்த கொடியனைய தேவியின் கற்பு (தவத்தொடு கூடிய அறம் வளர்த்த) கடல்-கடல் ஒலிபோல் ஒலிகொண்ட கச்சிப்பதி-காஞ்சியந் திருநகரில் அழகிய பெருமாளே! (கடப்பப் பொற்கழற் செப்பித் தொழுவேனோ) 466. எனக்கும் கொஞ்சம், உனக்கும் கொஞ்சம் என்று கத்து (கூச்சலிடுகின்ற), அத்தவர்க்கு (பொருட் பெண்டிருக்கு - விலைமாதருக்கு இச்சை - விருப்பமுள்ள பொருள். பொருளையும் பொன்தட்டு-பொன்தட்டு (முதலானவைகளையும்) இடு தருகின்ற இக்கை-ஆபத்தைக் கொண்ட இந்த குக்குடில் சிறுமை வாய்ந்த தேகமானது, மாயம்-மாயமாய் மறைந்தது.