பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம் திருப்புகழ் உரை 19 பசுக்கூட்டங்களை விளங்கக் கொண்ட (பொதுவர்) இடையர்கள் செல்லும் வழியில் உள்ள பழைய நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்த அழகனே! ஆயிரமுகமாக ஒடும் ஆகாய கங்கையையும், நிலவையும், கொன்றையையும், வில்வத்தையும் சிரசிற் சூடியுள்ள (நம்பர்) பெருமானுடைவ பெருஞ் செல்வமே! மலர்ந்த தாமரையொத்த திருவடியை உடைய பெருமாளே! நறுமணமுள்ள தாமரையை ஒத்த திருவடியை உடைய பெருமாளே! வெள்ளிகரத்தமர்ந்த பெருமாளே! (அல்லது மலர்ந்த தாமரைகளும் நறுமணத் தாமரைகளும் உள்ள வெள்ளிகரத்தில் அமர்ந்த பெருமாளே எனலுமாம்.) (பொற்பதங்கள் பெறலாமோ) 662. உலகில் நிறைந்த குறைபாடுள்ளவர்களாம் (பொது மகளிரின்) குளிர்நகை முல்லை) குளிர்ந்தபற்கள், முல்லைமலர் போன்றவை பேசும் சொல் முற்றின வெல்லம் போன்றது. காது இளங்கொடி வள்ளைக்கொடி, இடை ஒரு சிறிய கொடி, (குயமுலை) இளமுலை - (அல்லது குயம் எனப்படும் கொங்கை) கொள்ளை - நிரம்பியுள்ளது - என்று எல்லாம் கூறி விருப்பம் மிக்கு அடைந்து (18 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) பின்னும் - திருவாரூருக்குத் தெற்கே 8 மைல் துரத்தில் உள்ள திரு நெல்லிக்கா என்னும் தேவாரம் பெற்ற தலத்திலும் நெல்லிமரம்" ஸ்தல விருக்ஷம் அது கோயிலில் இருக்கின்றது. f இதழி வெகுமுக ககன நதி, உடுபதி சேர் ஜடாமவுலி சீர்பாத வகுப்பு. வெகுமுக ககன நதி - கங்கை ககனத்தில் நின்று இழிந்தது. கங்கைக்குச் "சுவர்க்கத்தில் மந்தாகினி", பூமியில் கங்கை பாதளத்தில் போகவதி' எனப் பெயர் - (அபிதான சிந்தாமணி) கங்கை சூடிய வரலாறு - பாடல் 446 பக்கம் 622 - கீழ்க்குறிப்பு. # தவலிகள் - குறைவானவர்கள். தவல் - குற்றம், குறைவு. X குயம் - இளமை (திவாகரம்) கொங்கை O விழைமேவி - விழைந்து மேவி; விழைதல்மேவி.