பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 657. உப்ய. தான தந்தன தானன தனதான 'வேழ முண்ட விளாகனி யதுபோல. மேனி கொண்டு வியாபக மயலூறி. நாளு t மிண்டர்கள் போல்மிக அயர்வாகி. நானு நைந்து விடாதருள் புரிவாயே

  1. மாள அன்றம ணிசர்கள் கழுவேற.

வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா, காள கண்ட னுமாபதி தருபாலா. காசி கங்கையில் மேவிய பெருமாளே.(3)

  • வேழம் உண்ட விளங்கணி: வேழம் என்னும் நோயால் உண்ணப்பட்ட விளாம்பழம் உள்ளிடில்லாமற் போகும். களிறுண்டதோர் விளங்கனிபோல் வறிதா' தஞ்சை வாணன்கோவை 56, சீவக சிந்தாமணியில் வேழந் துற்றிய வெள்ளில்" எனவரும் 232 பாட்டில் வேழம் - வெள்ளிலுக்கு (விளாம்பழத்துக்கு வருவதொரு நோய் என்றும், 1024ஆம் பாடலில் - வெஞ்சின வேழம் உண்ட வெள்ளிலின் வெறியமாக நெஞ்சமு நிறையு நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி என்ற இடத்துக் கொடிய வேழமென்னும் நோயுண்ட விளாம்பழம் போலே வெறுவி யேமாம்படி நெஞ்சையும் நிறையையும் பிறரறியாமற் கண்ணினாற் கவர்ந்த கள்வி' எனவும், வேழம் தேரை போயிற் றென்றாற் போல்வதொரு நோயென்க இனி யானை யுண்டது வெறுவிதாம் என்றும் உரைப்ப எனவும், 1122ஆம் பாடலில் வெஞ்சின வேழமுண்ட விளங்கனி போன்று நீங்கி என்ற இடத்து களிறுண்ட விளங்கனி போன்று வெறுவிதகாக அறிவு முதலியன நீங்கி" எனவும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.

வேழம் விளாம்பழத்துக்கு வருகின்ற ஒரு நோய் என்பதே உண்மைப் பொருள் என்பது - உலங்குண்ட விளங்கினிபோல் உள்மெலியப் புகுந்து என்னை நலங்கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே" . எனவரும் நாச்சியார் திருமொழியால் (8-6) நன்கு விளங்குகின்றது. (உலங்கு -கொசுகு) f மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின் - திருப்பல்லாண்டு. ( - பக்கம் 9. பார்க்க)