பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 519 கொண்ட, அல்லது கொங்கைப் பாரா நறுமணங் கொண்ட, குயில்ே பான்றவள்; சிவபிரானிடத்தே காமம் நிறைந்த நல்ல செயிலினளுமான பத்தினி, மாணிக்கம் போன்று மின்னொளி வீசுபவள்; மாசற்றவள் ஆகிய உமையைப் பாகத்திற் கொண்டவர்; சூலத்தைக் கையிற் கொண்டவர், அனல் மேனிப் பரமனார் ய சிவபிராற்கு ஒப்பற்ற ஜோதிப் பொருளை அவர் செவியில் ஏற்றிய முருகனே! ஜோதி ஒளி ஒழுக்கத்தினளும், முத்தமிழ் வல்லவளுமாகிய (மான்போன்ற) வள்ளியை அணைந்த பெருமாளே! (அல்லது முத்தமிழ்ப் பெருமாளே; மானை (வள்ளியைப்) புணர் பெருமாளே! சோதிப் புலியூரை விரும்பியுள்ள பெருமாளே! (முத்தியை அருள்வாயே) 649. பனிபோல அளவுள்ள ஒரு துளி (சுக்கிலம்) சலத்துவார வழியாய்க் கருத்தரித்துப், பத்துமாதக் கணக்கில் தலைகீழாகப் (படி) பூமியில் (மேவிட்டு) வந்து பொருந்தி, உடல் கொண்டு தவழ்பவராய்ப், பின்பு தத்தித் தத்தி அடியிட்டு நடை பயில்பவராய் (உத்தியில்) (மழலைப்) பேச்சில் (உரை. யாடலில்) சில நாள்கள் ஒழியப் (பின்னர்) கொங்கைகளை உடைய பெண்கள் என்னும் குழியில் விழுபவராய்த் (தத்துவர்) காலத்தைத் தாவிச் செலவிடுவார் (விரைவில் கழிப்பார்), (பின்பு) வஞ்சனை கொண்டவனான யமன் வருகின்ற அந்த நாளில். நிலைத்திருக்க முடியாதவராய்த் தமக்கு வீடாகிய சரீரத்தை விடுவார்; இப்படித் தளர்ந்தொழியும் மாயமான துயரம் நீங்காதோ!