பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 491 கைகளைக் கொட்டும் (துணங்கைக் கூத்தாடிடும்) பேய்கள் உளறிக் குழறும் பாடல்களைப் பிரியப்பட்டு மெச்சுகின்ற ஒளிவேலனே! அன்னங்கள் உலவும் நெல் வயல்கள் சூழ்ந்துள்ள சோலைகள் விளங்கும் புலியூரனே! சூரர்கள் நிரம்பக் கொண்டாடும்படி நடிக்கின்ற மயிலை நடத்தும் பெருமாளே! (ஞானதீப விளக்கம் காண. பத்மந் தருவாயே) 639. ஆய்ந்து ஆய்ந்து தலைமயிரை - அதில் மலர்களைப் பரவும்ப்டி முடித்து, (அல்லது பரவமுடித்து உடலில்) சந்தனம் அணிந்துள்ள கச்சு பொருந்திய - கொங்கை என்னும் மலைபோன்ற சேனையுடன் தேன் போலுள்ள பவளம் போன்ற வாய்மொழியாற் குயில்போல. (கூவிக்கூவி) அழைத்து அழைத்து, (ஆடவர்களைக்) கண்டு இசையுடனே பேசும் பேச்சுக்குத் தக்கபடி வெட்கப்பட்டும், குனிந்தும், பாய்ந்தும் நடிக்கின்ற சில பொதுமகளிர், ஒன்று கூடியும், தெளிவுற்றும், சூழ்ந்து யோசிப்பவராய்ப் பொருள் வருமோ என்று பேசித் தோள்மீது அழகிய புடைவையால் கொங்கையை மூடி, வஞ்சனை எண்ணத்துடன், துளக்கமும் இல்லாதவர். களாய்த் தெருவில் ஒடியும் தேடியும் சோம்பலாய்க் காலங்கழிக்கும் சில பொதுமகளிர் ஒருசேர ஒருமிக்க (கலி) தரித்திர நிலையைச் சேர்ந்தவர்களாய்ச், (சூளைக்காரராய்), வேசிகளாய், ஒழுங்கு இல்லாதவர்களாய்த் தம்மிடம் வரும் சிலரைச் சாவும் அளவுக்குக் கேடு செய்பவர்கள் - அத்தகைய பொது மகளிரின் தொழில்களில் உறவு கொள்ளுதல் நல்லதா? (உறவு கூடாது என்றபடி).