பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 487 637. இருளும், கதிர் (சூரிய சந்திர ஒளி) எதுவும், அணுக முடியாத பொன்னிடத்தை (இரவு பகல் அற்ற இடத்தை) அடைந்து, என் வினை நோய் இரண்டும் (தீவினை - நல்வினை என்னும் இரண்டு நோயும்) எரிபட்டழிய, (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும்மலங்களும் ஒழிய, ஒளி விளங்கும் (மூலக ஒளி) மூலாக்கினி (மூலாதார அக்கினி) பொருந்தி அருவி பாய்வதுபோல இனிய தேவாமிர்தம் ஊற, உன் திருவருள் எல்லாம் எனக்கு உரியதாக உதவியருளி, சிவஞானத்தை நான் மகிழ்ந்து பெறும்படி அருளி உன் இணையடிக்ளைத் தந்தருளுக. மேலான தேசிகமூர்த்தி, தமக்கு ஒரு குருவே இல்லாதவர், பரந்த வானில் உள்ள சந்திரன் (அல்லது கடல்போன்ற கங்கையும் வானில் உள்ள சந்திரனும்) தவழ்கின்ற சடையை உயிடப, 0 பவளமேனிப் பெருமான், எனது தந்தை, "பரம ரகசியத்தினர் அருளிய குழந்ன்தயே! 0 பவள வண்ணப் பரிசார் திருமேனி சம்பந்தர் 1-27.5.

  • சிவபிரான் பரம ராசியர் என்பதற்கு ஒரு சான்று திருக்குற்றாலப் புராணம் கூறும்.

காமமே கதியாய்ப் பல பாவங்கள் செய்த ஒரு மறையவனைச் சிவகணத்தினர் சிவலோகத்துக்கு அழைத்துக் கொண்டுபோக, இது நீதியா என்று இயமன் அறிய விரும்பிச் சிவபிரானிடம் முறையிட அவர் இந்த மறையவன் இறக்கும்போது இவன் மேனியில் திருக்குற்றாலத்து மந்தமாருதம் (காற்று) வீசின. புண்ணியத்தால் இவன் செய்த பாபங்கள் சூறைக் காற்றிற்பட்ட பஞ்சுபோல விலகிச் சிவபுண்ணியம் இவனுக்குக் கை கூடிற்று: ஆதலால் சிவபதம் இவன் சேர்ந்தனன் என விளக்கினார். இந்தப் பரம ராசியம்" திருமால், வேதங்கள் - யார்க்கும் தெரியாது. இந்த ரகசியத்தைச் சிவபிரான் வெளியிட இயமன் உணர்ந்து மகிழ்ந்தான். முகுந்தனாலும், பன்னரிய மறையாலும் தெளிவரிய பரம ராசியத்தின் பான்மை மன்னு பெருந்திரிகூடத் தென்றலங்கால் மகிமையென மகிழ்ச்சி கூர்ந்து. பகடேறித் தருமன் போந்து" - (திருக்குற்றாலப் புராணம் - மந்தமாருதம் 133-34)